AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டமன்ற சபாநாயகர் யார்?.. போட்டியின்றி தேர்வாகும் ஜே.சி.டி பிரபாகர்!

Tamil Nadu Assembly Speaker | தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில் ஜேசிடி பிரபாகர், எம்.ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாக உள்ளனர் என கூறப்படுகிறது.

சட்டமன்ற சபாநாயகர் யார்?.. போட்டியின்றி தேர்வாகும் ஜே.சி.டி பிரபாகர்!
ஜேசிடி பிரபாகர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 May 2026 07:58 AM IST

சென்னை, மே 12 : 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) முடிந்து சில நாட்கள் கழித்த பிறகு தற்போது புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான சபாநாயகர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். சபாநாயகர் பதவிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஜே.டி.சி பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு எம்.ரவிசங்கர் ஆகியோர் விருப்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள சபாநாயகர் தேர்தல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று நடைபெறும் தமிழக சட்டமன்றத்திற்கான சபாநாயகர் தேர்தல்

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை வகித்தது. இந்த நிலையில், அதிக இடங்களை பெற்ற கட்சியாக தவெக இருந்த நிலையில், ஆட்சி அமைக்க கூடுதலாக 10 இடங்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. பதவி ஏற்றதும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறியதை அடுத்து சட்டப்பேரவை கூடியது.

இதையும் படிங்க : முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்.. பதிலுக்கு முதல்வர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

சட்டப்பேரவையின் முதல் நாள், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், சட்டமன்ற சபாநாயகரை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. அதற்கான தேர்தல் இன்று சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.

போட்டியின்றி தேர்வாக உள்ள சபாநாயகர், துணை சபாநாயகர்

இந்த சபாநாயகர் போட்டிக்கு தவெகவின் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி பிரபாகர் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.ரவிசங்கர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் விருப்பமனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக இவர்கள் போட்டியின்றி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.

இதையும் படிங்க : இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏக்கள்.. வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏக்கள்

இன்று சட்டமன்றம் கூடிய பிறகு சபாநாயகர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us