“திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!
திமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களை, தங்களது சாதனைகள் என்பது போல தவெக அரசு சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், "திமுகவின் சாதனைகள் மீது தங்களது லேபிளை ஒட்டிப் பெருமை தேடிக்கொள்ளும் ஒரு 'ஸ்டிக்கர் அரசு' தான் இந்த தவெக அரசு" என்று சாடினார்.
சென்னை, ஜுன் 12: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசிய உரைக் குறிப்புகள் மற்றும் தவெக அரசின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், “தமிழகத்தில் தவெக அரசு அமைந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசின் சாதனைகள் என ஒரு நீண்ட பட்டியலை முதல்வர் விஜய் வாசித்துள்ளார். அவர் குறிப்பிட்ட அந்த சாதனைகள் அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: ‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!
ஒரு மாத ‘சோபா மாடல்’ சாதனையா?
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் குறிப்பிட்ட முக்கியப் புள்ளிவிவரங்களை முன்வைத்து உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் (42%) பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் அபார வளர்ச்சி. இவற்றைக் குறிப்பிட்ட உதயநிதி, “இவை எல்லாம் முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
‘ஸ்டிக்கர் அரசு’ என விமர்சனம்:
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது…
— Udhay (@Udhaystalin) June 12, 2026
திமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களை, தங்களது சாதனைகள் என்பது போல தவெக அரசு சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், “திமுகவின் சாதனைகள் மீது தங்களது லேபிளை ஒட்டிப் பெருமை தேடிக்கொள்ளும் ஒரு ‘ஸ்டிக்கர் அரசு’ தான் இந்த தவெக அரசு” என்று சாடினார். ‘சிங்கப்பெண்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தங்களது புதிய திட்டங்கள் போலக் காட்ட முயன்று, அவற்றைச் செயல்படுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேகதாது விவகாரத்தில் மௌனம் ஏன்?:
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் பேசத் தவறிவிட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். குறிப்பாக, தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் குறித்தோ, அது தொடர்பாகத் தங்களது கூட்டணி கூட்டணிக் கட்சிகளிடம் பேச வேண்டிய அழுத்தம் குறித்தோ எந்தவொரு கருத்தையும் முதல்வர் அங்கு பதிவு செய்யவில்லை என்றும், பிரச்சினைகளை எதிர்கொள்ள அஞ்சி அவர் மௌனம் காப்பதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிக்க: அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!
பொய் வெற்றிகள் நிலைக்காது:
மேலும், “இப்படி போலியான விளம்பரங்கள் மூலமும், அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலமும் பெறப்படும் ‘பொய் வெற்றிகள்’ அரசியல் களத்தில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது. இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். முதல்வர் விஜய் தாங்கள் செய்த உண்மையான சாதனைகள் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.