AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடித்து கொலை செய்து விடுவேன்.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல்.. வைரலாகும் ஆடியோ!

Minister Jagadeeswari Threat TVK Secretary: விருதுநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளருக்கு ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அடித்து கொலை செய்து விடுவேன்.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல்.. வைரலாகும் ஆடியோ!
அமைச்சர் கொலை மிரட்டல்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Jul 2026 07:28 AM IST

விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டி வ. உ. சி. நகரை சேர்ந்தவர் ராஜகுரு. இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் சாத்தூர் தொகுதி மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். அத்துடன் ஊராட்சி ஒன்றியங்களில் அரசு சார்பில் விடுக்கப்படும் ஒப்பந்தங்களை எடுத்து அந்த பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக நிர்வாகி ராஜகுருவுடன், ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த ஆடியோவில், அமைச்சர் ஜெகதீஸ்வரி, சாத்தூரை சேர்ந்த மற்றொரு ஒன்றிய செயலாளர் லட்சுமணனுக்கு ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வந்து லட்டு கொடுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்புகிறார். அத்துடன் ஒன்றியம் 3 மற்றும் 4 பிரிவுகளாக உள்ளது.

புகார் அளித்து தொலைத்து கட்டிவிடுவேன்

அதனை ஒன்றாக இணைத்து அந்த ஒன்றியங்களில் வழங்கப்படும் ஒப்பந்தங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று நீங்கள் கேட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. என் தொகுதியில் அதிகாரிகளிடம் எது பேசினாலும் காவல் நிலையத்தில் புகார் அளித்து தொலைத்து கட்டி விடுவேன் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகிறார். மேலும், என்னை ஆரம்பத்தில் இருந்தே அவர் தொல்லை கொடுத்து வருகிறார். ஏற்கனவே, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் எச்சரித்துள்ளார். எனது தொகுதிக்குள் அந்தப் பையன் வருவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்.

மேலும் படிக்க: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!

அடித்து கொலை செய்து விடுவேன்

அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து ஜட்டியோடு அடித்துக் கொன்று விடுவேன் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுகிறார். இருக்கும் போதே என்னிடம் வேலைக்கு ஆகாது. என்னை பார்த்தால் எப்படி பைத்தியக்காரி மாதிரி தெரிகிறதா. அவனை எனது பகுதிக்குள் கால் வைக்க விடமாட்டேன். சாத்தூர் தொகுதி காரர்களை எனது தொகுதிக்குள் வர விட மாட்டேன் என்று ஆக்ரோஷமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக பேசி அமைச்சர் ஜெகதீஸ்வரி, சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் ஒவ்வொரு நாளும் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இந்த ஆடியோவானது ராஜபாளையம் எம்எல்ஏவாக வெற்றி பெறுவதற்கு முன்னதாக அவரிடம் பேசிய ஆடியோ என்று கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஜூன் மாதம் ராஜகுரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!

Follow Us