ஜல்லி கற்கள், எம் சாண்ட் கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை – தமிழக அரசு அதிரடி – காரணம் என்ன?
எம் சாண்ட், ஜல்லி கற்கள், கருங்கல் உள்ளிட்ட கனிமங்களை தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனிம வளங்கள் குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, ஜூலை 28 : எம் சாண்ட், ஜல்லி கற்கள், கருங்கல் உள்ளிட்ட கனிமங்களை தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனிம வளங்கள் குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை
மேலும் இந்தப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீடு கட்டும் மக்கள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீடு என்பது பலரின் கனவு என்பதால், இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பலருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிக்க : பால், தயிர் விலை மீண்டும் உயர்வு.. தனியார் நிறுவனங்களின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..
இந்த நிலையில் வீடு கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எம் சாண்ட், ஜல்லி கற்கள் மற்றும் சாதாரன கற்கள் உள்ளிட்டவற்ற அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின் பெயரில் அமைச்சர் பிரபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பிரபுவின் எக்ஸ் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
இயற்கை வளங்களைப் பாதுகாத்து, நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில்… pic.twitter.com/1CAnCEywt7
— Dr.Tk.Prabhu (@drtkprabhu_TVK) July 27, 2026
இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கனிம வளங்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிமங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது, தமிழ்நாட்டில் இருந்து கனிமங்களை ஏற்றுமதி செய்ய 3 மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் அலுவலகம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
இது தொடர்பாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஜூலை 27, 2026 தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். இயற்கை வளங்களைப் பாதுகாத்து, நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.