AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் கனிம வள மையம் அமைக்கப்படும்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!

Mineral Resource Centre in Tamil Nadu | தமிழகத்தில் அரியவகை கனிம வழித்தடம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசா அகிய மாநிலங்களில் அரிய வகை கனிம ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கனிம வள மையம் அமைக்கப்படும்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Feb 2026 13:03 PM IST

டெல்லி, பிப்ரவரி 01 : 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் (2026 – 2027 Union Budget) சரியாக காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழகத்தில் அரியவகை கனிம வழித்தடம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசா அகிய மாநிலங்களில் அரிய வகை கனிம ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்

இன்று காலை சரியாக 11 மணி அளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார். அதில் தமிழ்நாட்டை மையப்படுத்தி பல்வேறு முக்கிய அறிவுப்புகள் இடம்பெற்று இருந்தன. அவற்றின் ஒன்றுதான் தமிழ்நாட்டில் கனிம வள மையம் அமைக்கப்படுவது. தமிழ்நாடு உள்ளிட்ட கனிம வளங்கள் மிகுந்த கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசா அகிய மாநிலங்களில் அரிய வகை கனிம ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதையும் படிங்க : Gas Cylinder Price Hike : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

கனிம வள திட்டத்தின் சிறப்பு என்ன?

அரிய கனிமவள நிரந்தர காந்த உதிரி பாகங்களுக்கான திட்டம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கனிம வளங்கள் மிகுந்த தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை தான் நிதியமைச்சர் தற்போது பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இனி ஏடிஎம் மையங்களில் ரூ.10, ரூ.50 நோட்டுகளை பெறலாம்.. மத்திய அரசின் சோதனையில் அசத்தல் திட்டம்!

இந்த திட்டத்தின் மூலம் அரிய வகை கனிம வள காரிடர்களை அமைத்து, கனிம வளங்களை வெட்டி எடுக்கவும், அதனை மேம்படுத்தவும் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பெட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கான முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.

Follow Us