Gas Cylinder Price Hike : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!
Commercial Gas Cylinder Price Hike In Chennai | பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, பிப்ரவரி 01 : ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் கேஸ் சிலிண்டர் விலையில் (Gas Cylinder Price) மாற்றம் ஏற்படும். வணிக பயன்பாடு அல்லது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைய அல்லது உயர செய்யும். அந்த வகையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 01, 2026) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் (Commercial Gas Cylinder) விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாத தொடக்கத்தில் விலைகளை உயரத்தும் எண்ணெய் நிறுவனங்கள்
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக வணிக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 01, 2026) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Budget 2026 Speech Live Streaming: உடனடி அப்டேட்கள்.. பட்ஜெட்டை நேரலையில் பார்ப்பது எப்படி?
நகர வாரியான விலை நிலவரம்
- டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.49 உயர்ந்து ரூ.1,740.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஜனவரி, 2026-ல் ரூ.1,691.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- கொல்கத்தாவில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.49.50 உயர்ந்து ரூ.1,844.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஜனவரி, 2026-ல் ரூ.1,795.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மும்பையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.49.50 உயர்ந்து ரூ.1,692-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஜனவரி, 2026-ல் ரூ.1,642.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,899.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஜனவரி, 2026-ல் ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.7,600 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட சாமானியர்கள்!
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னையில் அதிகப்படியாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.1.899.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.