AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. நோட்டாவுக்கு குறைந்த மக்கள் ஆதரவு.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

Tamilnadu Assembly Election Results: தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு 0.75 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் இது 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, சுமார் 1,99,901 பேர் மட்டுமே இந்த முறை நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. நோட்டாவுக்கு குறைந்த மக்கள் ஆதரவு.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
நோட்டாவுக்கு வாக்கு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 May 2026 12:54 PM IST

சட்டமன்ற தேர்தல் முடிவுகளில், ‘நோட்டா’ (NOTA – None of the Above) எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற விருப்பத்தேர்விற்கு மக்களிடையே வரவேற்பு குறைந்து வருவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், தமிழகமே எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தது. அதன்படி, முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 74 இடங்களை பெற்று எதிர்கட்சியாக அமைந்துள்ளது. தொடர்ந்து, அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..

தனிப்பெரும் கட்சியான தவெக:

இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. தமிழகத்தில் 1952 முதல் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதன்பின் தற்போது வரை, அதாவது 59 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்தன. அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்புத் தரவில்லை. ஆனால் முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவுக்கு அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது.

நோட்டாவின் பின்னணி:

இதனிடையே, தேர்தல் முடிவுகளில், ‘நோட்டா’ எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற விருப்பத்தேர்விற்கு மக்களிடையே வரவேற்பு குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் வருமாறு. கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49-O பிரிவின் கீழ் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இதில் வாக்காளரின் ரகசியம் காக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘நோட்டா’ பொத்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

வாக்கு சதவீதம் சரிவு:

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு 0.75 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் இது 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, சுமார் 1,99,901 பேர் மட்டுமே இந்த முறை நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.

இதையும் படிக்க: “தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர்”.. புயலை கிளப்பிய திருமாவளவன்!!

தொடரும் சரிவுப் போக்கு:

கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களைக் கணக்கில் கொண்டாலும், நோட்டாவிற்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதைக் காண முடிகிறது. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 1.08 சதவீதமாக இருந்த நோட்டா வாக்குகள், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் 0.99 சதவீதமாகக் குறைந்தது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த எண்ணிக்கை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது, வாக்காளர்கள் ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு வாக்களிப்பதையே அதிகம் விரும்புவதை உணர்த்துகிறது.

Follow Us