AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..

இதேபோல், அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இங்கு முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் தவெக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் தாமோ.அன்பரசன் ஆலந்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..
தோல்வியை சந்தித்த திமுக அமைச்சர்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 May 2026 09:41 AM IST

2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் பதிவு செய்துள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாக, 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தவெக, சுமார் 35% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு நேர்மாறாக, ஆளுங்கட்சியான திமுக 24% வாக்குகளையும், அதிமுக 22% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4% வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதையும் படிக்க: தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக.. ஆட்சி அமைக்க முடியுமா?.. தமிழக அரசியலில் காத்திருக்கும் புதிய திருப்பம்!!

முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் தோல்வி:

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 32 திமுக அமைச்சர்களில், முதலமைச்சர் உட்பட 16 பேர் தோல்வியைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வெற்றி பெற்ற தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தவெக வேட்பாளர் முஸ்தபாவிடம் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். திமுகவின் மூத்த நிர்வாகியும், அமைச்சருமான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தூத்துக்குடியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்ட கீதா ஜீவன், தவெக வேட்பாளரும், விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத்திடம் சுமார் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தவெக ஆதிக்கம்:

திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மாநகரையும் தவெக தன்வசப்படுத்தியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசத்திடம் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி திருவெரும்பூர் தொகுதியில் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபரிடம் 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதர அமைச்சர்களின் நிலை:

இதேபோல், அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இங்கு முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் தவெக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் தாமோ.அன்பரசன் ஆலந்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் குமாரிடம் தோல்வியடைந்தார். அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி தொகுதியில் அமமுக வேட்பாளரிடம் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இதையும் படிக்க: முதல் தேர்தலிலேயே 108 இடங்களை பிடித்த தவெக.. 73 இடங்களுடன் எதிர்க்கட்சியான திமுக..

மேலும், அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதியில் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். மதுரை கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளரிடம் பி. மூர்த்தி தோல்வி பெற்றார். சேலம் வடக்கு தொகுதியில் ராஜேந்திரன், காங்கேயம் தொகுதியில் அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் முத்துசாமி ஆகியோரும் தங்களது தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us