AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஜூன் 12, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அரசு தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியிட்டார்.

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jun 2026 15:52 PM IST

சென்னை, ஜூன் 12 : 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஒரிஜினல் மார்க் ஷீட், மறுமதிப்பீடு மற்றும் துணைத் தேர்வுகள் முடிந்த பின்னர் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா தெரிவித்தார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து கடந்த 2026 மே மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதே போல தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டன. மேலும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவும் மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் விதமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்பட்டன.

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

இந்த நிலையில் கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஜூன் 12, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அரசு தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றார்.

இதையும் படிக்க : “பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!

கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

 

மேலும் பேசிய அவர் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிறந்த தேதியை உறுதிய செய்து, அது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே அவர்களின் விவரங்களை சரி செய்யப்பட வேண்டும் அவர்கள் பள்ளியை விட்டு சென்ற பின் அதனை சரி செய்வது கூடுதல் வேலையாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. என்றார்.

மேலும் மறுமதிப்பீடு கேட்டு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்றார்.

இதையும் படிக்க : திமுக தேர்தல் தோல்வி.. சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. உண்மையை உடைத்த ஆய்வு குழு!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி

கடந்த 2026 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நியமனம் செய்யப்பட்ட தேர்வு எழுதும் நபர்கள் சரியாக தேர்வு எழுதவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர் இதனை கருத்தில் கொண்டு இந்தாண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுதுபவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்தவுகளில் இருந்து பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றார்.

Follow Us