AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்க்கு அடுத்தடுத்து தலைவலி.. தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் தவெகவினர்.. சேலத்தில் கட்சி நிர்வாகி செய்த அட்டூழியம்!

Salem TVK Functionary Arrested: சேலத்தில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவரை கொண்டாலம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல, தூத்துக்குடி, சென்னையில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜய்க்கு அடுத்தடுத்து தலைவலி.. தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் தவெகவினர்.. சேலத்தில் கட்சி நிர்வாகி செய்த அட்டூழியம்!
சேலத்தில் பாலியல் புகாரில் தவெக நிர்வாகி கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Jun 2026 07:25 AM IST

சேலம் மாவட்டம், நெய்க்காரன் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் ( 40 வயது). இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும், அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் மீது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் சுமத்தியதுடன், இது தொடர்பாக ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில், நான் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறேன். எனது குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். எனக்கு, போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்தேன். அப்போது, நெய்க்காரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் எனக்கு அறிமுகமாகினார். அவர் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்து எனக்கு உதவி புரிந்தார். இதனால், அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்து வந்தோம்.

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

இந்த நிலையில், அவரது செல்போனை பார்த்த போது அதில் பல்வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அதில் இருந்த என்னுடைய வீடியோக்களை அழித்துவிட்டு அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டேன். இதை அறிந்த அந்த நபர் உனது ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் போதெல்லாம் நீ வரவேண்டும். இல்லையெனில், உனது ஆபாச வீடியோக்களை நான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

மேலும் படிக்க: விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!

பெண் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

எனவே, இவரால் பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆடியோவில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரியின் கவனத்துக்கு சென்றது. அவரது உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், பல்வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.

தவெக நிர்வாகி அதிரடி கைது

இதன் மூலம் பல பெண்களிடம் மணிகண்டன் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதன் மூலம் அவர்களை மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மணிகண்டனை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரு தவெக நிர்வாகிகள், சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஒரு தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் – ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது

Follow Us