தமிழ்நாட்டில் எம்எல்ஏகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் – தொடங்கி வைக்கும் முதல்வர்
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் வருகிற ஜூன் 18, 2026 அன்று முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் நடந்துகொள்ளும் முறை குறித்து எம்எல்ஏகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வகுப்புகளை முதல்வர் விஜய் இன்று துவங்கி வைக்கிறார்.
சென்னை, ஜூன் 18 : தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் வருகிற ஜூன் 18, 2026 அன்று முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவருக்கிறது. இதனையடுத்து சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்வது, என்ன பேச வேண்டும் என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஜூன் 17, 2026 இன்றும், ஜூன் 18, 2026 நாளையும் 2 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாகவும் இதனை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர் தெரிவித்துள்ளார். இதில் எதிர்கட்சி எம்எல்ஏகளும் பங்கேற்கலாம் என அவர் அறிவித்துள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எம்எல்ஏகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்
தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 18, 2026 அன்று முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில் அதில் வெற்றிபெற்ற பலர் முதன்முறை எம்எஎல்ஏகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சட்டமன்றத்தில் நடந்துகொள்ளும் முறை குறித்து 2 நாட்கள் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதில் பிற கட்சியை சேர்ந்த எம்எல்ஏகளும் கலந்துகொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் விஜய் துவங்கி வைக்கிறார்.
இதையும் படிக்க : சிங்கப்பெண்கள் படை இருந்தும் பாலியல் வன்கொடுமை? ரீல்ஸ் ஆர்வத்தை முதல்வர் ரியலில் காட்ட வேண்டும்.. சீமான் அட்டாக்!




கடந்த ஜூன் 12, 2026 அன்று செய்தியாளர்களை சந்தித்த சபநாயகர் ஜே.சி.டி பிராபகர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்ககத்தில் ஜூன் 16, 2026 இன்றும், ஜூன் 17, 2026 நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை முதல்வர் விஜய் ஜூன் 16, 2026 இன்று துவங்கிவைக்கவுள்ளார்.
இந்த பயிற்சியின்போது சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், சட்டமன்ற விதிகள், குறித்து பேரவை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளை பற்றி நன்கு அறிந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.
இதையும் படிக்க : இந்தியக் கூட்டணியில் இருந்து திமுக விலகவில்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் விளக்கம்..
மேலும் சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது, பேரவையில் எப்போது கேள்வி எழுப்ப வேண்டும், எப்படிப்பட்ட கேள்வி எழுப்ப வேண்டும் என்பது பற்றி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சட்டமன்ற பேரவைகளின் விதிகளுக்கு உட்பட்ட ஒரு சபையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்கள் இந்த புத்தாக்கப் பயிற்சியில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என்றார். வருகிற ஜூன் 18, 2026 தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த புத்தாக்க பயிற்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.