AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியக் கூட்டணியில் இருந்து திமுக விலகவில்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் விளக்கம்..

செய்தியாளர்களிடம் பேசிய பா. சிதம்பரம், “இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக இதுவரை திமுக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒரு கூட்டத்தில் பங்கேற்காதது என்பது வேறு; கூட்டணியிலிருந்து முழுமையாக விலகுவது என்பது வேறு. அதனால், திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகிவிட்டது என்று கூற முடியாது. எனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், திமுக இன்னும் இந்தியா கூட்டணியில்தான் உள்ளது” என தெரிவித்தார்.

இந்தியக் கூட்டணியில் இருந்து திமுக விலகவில்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் விளக்கம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Jun 2026 20:11 PM IST

ஜூன் 15, 2026: திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் இந்தியா கூட்டணியில்தான் நீடித்து வருகிறது என்றும், அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்தன. மக்களவைத் தேர்தல்கள், சட்டப்பேரவைத் தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் களங்களிலும் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வந்தன.

திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ்:

ஆனால், 2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார அணுகுமுறை மற்றும் தலைமை தொடர்பான கருத்து முரண்பாடுகள் காரணமாக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இருப்பினும், தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான மு.க ஸ்டாலின், “முதுகில் குத்திய காங்கிரஸ்” என கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பும் பதிலடி கருத்துகளை வெளியிட்டது.

இந்தியக் கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த திமுக:

இந்த அரசியல் பரபரப்பான சூழலில், அண்மையில் இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இதனால், திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகப்போகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுந்தது.

மேலும் படிக்க: தமிழகத்தில் டிஐஜி- எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ஆனால், திமுக கூட்டத்தில் பங்கேற்காதது மட்டும் கூட்டணியில் இருந்து விலகியதாக கருத முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பலர் திமுக கூட்டத்தை புறக்கணித்ததை விமர்சித்திருந்தனர்.

இந்தியக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறவில்லை:

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா. சிதம்பரம், “இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக இதுவரை திமுக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒரு கூட்டத்தில் பங்கேற்காதது என்பது வேறு; கூட்டணியிலிருந்து முழுமையாக விலகுவது என்பது வேறு. அதனால், திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகிவிட்டது என்று கூற முடியாது. எனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், திமுக இன்னும் இந்தியா கூட்டணியில்தான் உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தற்போதைய அரசியல் சூழலில் முக்கியமானது என்றும், இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பா. சிதம்பரத்தின் இந்த கருத்து, தேசிய அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us