AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் டிஐஜி- எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Police Officers Transfer: தமிழகத்தில் டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 56 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார். இது குறித்து முழு விவரம் இந்தப்பதிவில்.

தமிழகத்தில் டிஐஜி- எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 56 காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Jun 2026 19:50 PM IST

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, அரசுத் துறைகளில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது, காவல் துறையில் சுமார் 56 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காவல் துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த

மேலும் படிக்க: வெளியூர்காரன் என திட்டியதால் ஆத்திரம்.. தென்காசியில் தொழிலாளி கொடூரமாக அடித்து கொலை.. சக தொழிலாளி கைது!

  • டி. ஐ. ஜி. ஈ. எஸ். உமா சென்னை தலைமையிட டி. ஐ. ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை தலைமையிட துணை ஆணையர் கே. எஸ். பாலகிருஷ்ணன் சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருவள்ளூர் மாவட்ட எஸ். பி. ஆக பி. வி. சாய் பிரணீத்.
  • சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ். குத்தாலிங்கம்,
  • திருவண்ணாமலை எஸ். பி-ஆக கார்த்திகேயன்.
  • கடலூர் எஸ். பி. ஆக விவேகானந்த சுக்லா.
  • திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ். ஜெயக்குமார்.
  • விழுப்புரம் எஸ். பி. ஆக எஸ். மதிவாணன். ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் முதல் அரியலூர் மாவட்டம் வரை

  • விருதுநகர் எஸ்.பி- ஆக கௌதம் கோயல்.
  • தர்மபுரி காவல் கண்காணிப்பாளராக ஏ. கே. அருண் கபிலன்.
  • கிருஷ்ணகிரி எஸ். பி.- ஆக ஜி. எஸ். அனிதா.
  • நாமக்கல் எஸ். பி. ஆக யாதவ் கிரிஷ் அசோக்.
  • மதுரை மாவட்ட எஸ். பி. ஆக என். தேவநாதன்.
  • நாகப்பட்டினம் எஸ். பி. ஆக கெல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா.
  • தேனி எஸ். பி. ஆக கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம்.
  • நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஸ் பாலசுப்ரமணியன் சாஸ்திரி.
  • மயிலாடுதுறை எஸ். பி. ஆக புக்கியா சினேகா பிரியா.
  • திருப்பூர் எஸ். பி. ஆக சிருஷ்டி சிங்.

அரியலூர் எஸ். பி. பணியிட மாற்றம்

  • அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வகுமார் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  • தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையர் சமய் சிங் மீனா புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • செல்வ நாகரத்தினம் சென்னை சைபர் கிரைம் கண்காணிப்பாளராகவும் ஜவகர் மெட்ரோ சோன் சிபிசிஐடி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 56 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிர்ப்பு.. திருப்பத்தூரில் மறு வாக்கு எண்ணிக்கை.. உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் மனு தாக்கல்!

Follow Us