தவெக ஆட்சியில் 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்.. முதல்வர் ஜோசப் விஜய் ப்ரோ! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!
Nainar Nagendran Criticizes CM Vijay: தமிழகத்தில் கடந்த 48 மணி நேர்த்தில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 வயது குழந்தையை வட மாநில இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முள் புதரில் தூக்கி வீசி உள்ளனர். இதே போல, பூந்தமல்லியில் 10- ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில் சாலையில் நடந்து சென்ற மாணவியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 10- ஆம் வகுப்பு மாணவியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்
கடந்த 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். 15 போக்சோ குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திமுக ஆட்சியில் 125 சதவீதம் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தன. தற்போது, தவெக ஆட்சி அமைத்த ஒரு மாதத்தில் 100 சதவீதத்தை விட அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. 207 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் கஞ்சா புலங்கி கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மேலும் படிக்க:3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!




தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ப்ரோ
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ப்ரோ, முதல்வர் ப்ரோ. இந்த மூன்று வயது குழந்தையை பாருங்கள் ப்ரோ. அங்கிள்… அங்கிள்… என்று நரம்பு புடைக்க பேசினீர்களே விஜய் ப்ரோ. ஜோசப் விஜய் ப்ரோ… இந்த மூன்று வயது குழந்தைக்கு யார் பதில் சொல்வார்கள் ப்ரோ… பெரம்பூரில் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு யார் பதில் சொல்வார்கள் ப்ரோ… சொல்லுங்க ப்ரோ… ஜோசப் விஜய் ப்ரோ… எம்எல்ஏ அனைவரையும் மிரட்டி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்த ஆட்சி எத்தனை நாட்கள் தாங்கும். மக்களைப் பற்றிய கவலை இருந்திருந்தால் சட்டமூலங்கு நன்றாக இருந்திருக்கும். இவ்வளவு பாலியல் வன்கொடுமைகளுக்கும் காரணம் போதை பொருட்கள் தான். சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலரையே மூன்று பேர் கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர். ஜோசப் விஜய் ப்ரோ காது கேட்கிறதா. தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து சென்னையில் ஜூன் 18- ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியை இன்ஸ்டாவில் மயக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 இளைஞர்கள் கைது.. கோவையில் பயங்கரம்!!