AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பரிதாபமாக உதிர்ந்த சிறுமி உயிர்.. கள்ளக்காதலுக்காக மகளை தீர்த்துக்கட்டிய பாசக்கார தாய்… நாடகம் அம்பலம்!

Perambalur Crime: பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்ததாக பெற்ற மகளையை கயிறால் கழுத்தை நெறித்து கொலை செய்து நாடகம் ஆடிய பாசக்கார தாயை பாடாலூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரிதாபமாக உதிர்ந்த சிறுமி உயிர்.. கள்ளக்காதலுக்காக மகளை தீர்த்துக்கட்டிய பாசக்கார தாய்… நாடகம் அம்பலம்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 15 Jun 2026 15:20 PM IST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் ( 35 வயது). இவருக்கு நிஷாந்தினி ( 26 வயது) என்ற மனைவியும், கீர்த்திஷா ( 9 வயது) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், குணசேகரன் மற்றும் நிஷாந்தினி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து காரை சமத்துவபுரத்தில் உள்ள தனது தாய் அழகேஸ்வரி வீட்டில் தனது மகளுடன் நிஷாந்தினி வசித்து வருகிறார். நிஷாந்தினி பெரம்பலூரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சென்று வந்த போது மணிகண்டன் ( 30 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால், இருவரும் அவ்வப்போது வெளியே செல்வது, வீட்டில் தனிமையில் இருப்பது என்பன உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருப்பதற்கு மகள் கீர்த்திஷா இடையூறாக இருப்பதாக எண்ணி உள்ளனர்.

பெற்ற மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்

இதனால், மகளை தீர்த்து கட்டுவதற்கு நிஷாந்தினி முடிவு செய்துள்ளார். அதன்படி, சம்பவத்தன்று கீர்த்திஷாவை கையிரால் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தார். இதில், சிறுமி உயிரிழந்ததை அடுத்து, தான் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக கீர்த்திஷாவின் உடலை காரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, மருத்துவரிடம் எனது மகள் சாப்பிட்டு விட்டு தூங்கிய நிலையில் மீண்டும் எழுந்திருக்காமல் பேச்சு மூச்சு இன்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள்.. மீன்களின் விலை குறையுமா?

சிறுமியின் கழுத்தில் கயிறு தடம் அறிந்த மருத்துவர்

இதை உண்மை என நம்பிய மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தனர். அப்போது, சிறுமியின் கழுத்தில் கயிறால் நெறித்து கொலை செய்ததற்கான அடையாளங்களை மருத்துவர்கள் கண்டனர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு செய்வதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளை கொலை செய்து நாடகமாடிய பாசக்கார தாய் கைது

இந்த சம்பவம் குறித்து நிஷாந்தினியின் தாய் மாமா லோகநாதன் அளித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தினியை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெரம்பலூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகளை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. வடமாநில இளைஞர் கைது.. கும்மிடிப்பூண்டி அருகே கொடூரம்!

Follow Us