AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. வடமாநில இளைஞர் கைது.. கும்மிடிப்பூண்டி அருகே கொடூரம்!

shocking incident in Thiruvallur: பொதுமக்களுடன் காவல்துறையினர் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விபின் மந்தி (19) என்ற வாலிபரைக் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. வடமாநில இளைஞர் கைது.. கும்மிடிப்பூண்டி அருகே கொடூரம்!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Jun 2026 09:19 AM IST

திருவள்ளூர், ஜுன் 15: கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில இளைஞர் ஒருவர் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸார் விரைந்து கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க : “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!

முட்புதரில் மீட்கப்பட்ட பிஞ்சு:

அவ்வாறு அங்குள்ள குடியிருப்பில் வசித்து வரும் வடமாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை நேற்று மாலை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்கள் சிலர், அங்குள்ள ஒரு முட்புதரில் அந்தக் குழந்தை காயங்களுடன், உடல்நலம் குன்றிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் குழந்தையை அங்கிருந்து மீட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:

மீட்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தர்மஅடி:

குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே, ஒரே அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாநில இளைஞர் கைது:

பொதுமக்களுடன் காவல்துறையினர் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விபின் மந்தி (19) என்ற வாலிபரைக் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!

தங்கள் குழந்தைகள் பள்ளி, வீடுகளில் இருக்கும்போது உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 3 வயது குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us