மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள்.. மீன்களின் விலை குறையுமா?
Fishermen Return To Sea | ஏப்ரல் 14, 2026 முதல் ஜுன் 15, 2026 வரை என மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு அறிவித்தது. அது தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
சென்னை, ஜுன் 15 : கடலில் மீன்வளத்தை பெருக்க, மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மீன்பிடி தடை காலத்தை அறிவிக்கும். அந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி இல்லை. வழக்கம் போல இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்ட நிலையில், தடைக்காலம் முடிந்து மீனவர்கள் இன்று (ஜூன் 15, 2026) மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர். சுமார் 61 நாட்கள் தடைக்கு பிறகு அவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் விதிக்கும் மத்திய அரசு
இந்தியர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாக மீன் உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து மீன் பிடித்துக்கொண்டு இருப்பது மீன்களின் இனப்பெருக்கத்தில் சிக்கலை உருவாக்கி உற்பத்தியை குறைக்கும் என்பதால் மத்திய அரசு இந்த மீன்பிடி தடைக்காலத்தை அமலில் வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.
இதையும் படிங்க : தொடரும் ஆணவப் படுகொலைகள் – தவெக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் தடைக்காலம் அறிவிக்கப்படுவதை போல இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. ஏபர்ல் 15, 2026 முதல் ஜூன் 14, 2026 வரை இந்த மீன்பிடி தடைக்காமல் அமலில் இருந்தது. அதன்படி, சுமார் 61 நாட்கள் கழித்து இன்று மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு – நாளை விசாரணை – வெளியான தகவல்
அதிகாலையிலே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 15,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன் வரத்து மற்றும் விலை அதிகமாக இருந்த நிலையில், தற்போது தடை நீங்கியுள்ளதன் காரணமாக மீன்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.