“பிறப்புறுப்பில் கடுமையான காயம்” 3 வயது குழந்தை பாலியல் கொலையில் ஸ்டான்லி மருத்துவமனை டீன் உடைத்த அதிர்ச்சி உண்மை!
Tiruvallur Child Murder : திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடும செய்து கொலை செய்த சம்பவத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் அரவிந்த் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பகுதியில் வசித்து வரும் தம்பதியின் 3 வயது மகள் நான்கு வட மாநில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள முள் புதரில் வீசி சென்றனர். இதை தொடர்ந்து, அந்த குழந்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த குழந்தைக்கு உடல் கூறாய்வு செய்யப்பட்டு குழந்தையின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டீன் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தை மருத்துவமனைக்கு வந்த போது உடல் நலம் மிகவும் மோசமாக இருந்தது.
குழந்தையின் பிறப்புறுப்பு-மலம் கழிக்கும் இடம் கடும் சேதம்
குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் மலம் கழிக்கும் இடம் மிகவும் சேதம் அடைந்திருந்தது. மேலும், குழந்தைக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தது. இதுவும் குழந்தையின் உயிர் இழப்புக்கு காரணம் ஆகும். உடனடியாக குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. இருந்தாலும் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை சுமார் 7 மணி அளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!




குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்து அழைத்து சென்ற இளைஞர்
திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த குழந்தையிடம் பிஸ்கட் கொடுத்து அழைத்து சென்று வன்கொடுமை செய்ததாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் விபின் மஞ்சு என்பவரை அந்த பகுதி பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அந்த குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், ஒருவர் மட்டுமே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல்
சம்பவத்தை கண்டித்து இதில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யவும், இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிர்ப்பு.. திருப்பத்தூரில் மறு வாக்கு எண்ணிக்கை.. உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் மனு தாக்கல்!