காலி மது பாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி இயந்திரம் – சோதனை முறையில் அறிமுகம்
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் தங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தானியங்கி முறையில் இயங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூன் 16 : காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்காக தானியங்கி முறையில் இயங்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. மதுபிரியர்கள் பொறுப்பற்று சுற்றுலா தளங்களில் சாலை ஓரங்களில் வீசப்படும் மது பாட்டில்களால் விலங்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுலாக ரூ. 10 வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் காலி பாட்டில்களை மீண்டும் ஒப்படைக்கும் நபர்களுக்கு வசூலிக்கப்பட்ட 10 ரூபாய் திருப்பி அளிக்கப்படும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சாலை ஓரங்களில் வீசப்படும் பாட்டில்களின் எண்ணிக்கை குறையும் என கூறப்பட்டது.
காலி மது பாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி இயந்திரம் அறிமுகம்
இந்த நிலையில் இந்த திட்டத்தால் தங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இந்த திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த திட்டத்துக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டட் நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிக்க : ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!




இதனையடுத்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தானியங்கி முறையில் இயங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த இயந்திரத்தில் காலி மதுபாட்டில்களை ஒப்படைக்க, முதலில் தங்களது மொபைல் எண்ணை பதிவிட்டு அதன் மூலம் போனுக்கு வரும் ஓடிபியை சமர்பிக்க வேண்டும் பின்னர் காலி பாட்டில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் காலி பாட்டிலை இயந்திரத்தில் வைக்க வேண்டும். இதனையடுத்து பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் ரூ.10 நமது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மற்றொரு முறையில் பயனாளர்கள் தங்களது யுபிஐ செயலி மூலம் அந்த இயந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பின்னர் காலி பாட்டிலில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு காலி பாட்டிலை தானியங்கி இயந்திரத்தில் செலுத்த வேண்டும் பாட்டில் சரிபார்க்கப்பட்டவுடன் அதற்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதையும் படிக்க : சிங்கப்பெண்கள் படை இருந்தும் பாலியல் வன்கொடுமை? ரீல்ஸ் ஆர்வத்தை முதல்வர் ரியலில் காட்ட வேண்டும்.. சீமான் அட்டாக்!
தற்காலிகமாக சோதனை முறையில் சில மதுபான கடைகளில் இந்த தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை வெற்றிகரமாக செயல்பட்டால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது