இது விஜய் மாடல் அரசு… வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கிறார்… – சபாநாயகர் பேச்சு
சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18, 2026 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த பயிற்சி முகாமை முதல்வர் விஜய் ஜூன் 16, 2026 இன்று குத்து விளக்கை ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.
சென்னை, ஜூன் 16 : தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில் தவெகவில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் முதன்முறை எம்எல்ஏகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18, 2026 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த பயிற்சி முகாமை முதல்வர் விஜய் ஜூன் 16, 2026 இன்று குத்து விளக்கை ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.
எம்எல்ஏகளுக்கான புத்தாக்க பயிற்சியை துவங்கி வைத்த முதல்வர்
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூன் 16, 2026 இன்றும் ஜூன் 17, 2026 நாளையும் 2 நாட்கள் நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும், அவை நடைமுறைகள் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்படும்.
தமிழக சட்டமன்ற முதல் கூட்டம் ஜூன் 18, 2026 நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக எம்எல்ஏகளுக்கு பயிற்சி வழங்கும் வகையில் இந்த புத்தாக்க பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏகளுக்கான பயிற்சி முகாம்
#WATCH | Chennai | Tamil Nadu CM Vijay inaugurates the training programme for Members of the 17th Tamil Nadu Legislative Assembly.
The programme, organized by the Tamil Nadu Legislative Assembly Secretariat, will be held over two days starting today at the Conference Hall on… pic.twitter.com/NUXpB3QO78
— ANI (@ANI) June 16, 2026
இந்த நிகழ்வில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், இந்த சட்டசபையின் மூலமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சட்டங்களும் இந்தியாவின் பல சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. இந்தியா வியந்து போற்றி பாராட்டும் பல திட்டங்களை இந்த தமிழகம் தந்திருக்கிறது. அந்த வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர் முதல்வர் விஜய். இது விஜய் மாடல் அரசு. எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது. என்னாகுமோ ஏதாகுமோ என கதிகலங்கிக் கிடந்த மக்களுக்கு, புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்த மாபெரும் தலைவர் முதல்வர் விஜய் என்றார்.