இன்று வெளியாகிறது தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை – பரபரப்பு தகவல்
முதல்வராக பொறுப்பேற்றபோதே தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் நிதி நிலை குறித்து ஜூன் 16, 2026 இன்று நிதி நிலை அறிக்கை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன் 16 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து தவெக அரசு ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றபோதே தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதற்கேற்ப தமிழ்நாட்டின் மொத்தம் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் நிதி நிலை குறித்து ஜூன் 16, 2026 இன்று நிதி நிலை அறிக்கை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளியாகிறது தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை
தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கை ஜூன் 16, 2026 இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் அதனை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிடவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நிதி விரயம் தொடர்பான தகவல்கள் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : காலி மது பாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி இயந்திரம் – சோதனை முறையில் அறிமுகம்




சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்கள் முன் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இந்த நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் மாலை 5.30 மணிக்கு தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிடப்போவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் கஜானாவை காலி செய்துவிட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனையடுத்து நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த வெள்ளை அறிக்கையில் கடந்த ஆட்சியில் தமிழக அரசுக்கு வருவாய் செலவுகள் கடன் நிலை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் வெளிப்டுத்தும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.10 லட்சம் கோடியாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் மாநில அரசின் உண்மையான நிதி நிலை குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் எம்எல்ஏகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் – தொடங்கி வைக்கும் முதல்வர்
நிதி நிலை அறிக்கை வெளியானால் அதில் கடந்த ஆட்சியில் அரசின் நிதி கையாளப்பட்ட விதம் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கும். இதனையடுத்து அதற்கு திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. வருகிற ஜூன்18, 2026 வியாழக்கிழமை தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் திமுக சார்பில் கடந்த ஒரு மாதம் தமிழ்நாட்டில் நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது. பதிலுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த ஆட்சியில் தமிழக நிதி கையாண்ட விதம் குறித்து விமர்சனங்கள் முன் வைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.