AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் நெஞ்சை உலுக்கிய கொடூரம்.. மகளை கொன்று தந்தை தற்கொலை.. மனைவிக்கு லைவ் வீடியோ!

Chennai Crime : சென்னை மாவட்டத்தில் அரசு பள்ளி வளாகத்தில் பெற்ற மகளை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் நெஞ்சை உலுக்கிய கொடூரம்.. மகளை கொன்று தந்தை தற்கொலை.. மனைவிக்கு லைவ் வீடியோ!
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Jun 2026 19:49 PM IST

சென்னை மாவட்டம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாணம் அரசு பள்ளியில் லட்சுமணன் பிரசாத் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் பள்ளி வளாகத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில், மனைவி மீதான சந்தேகத்தின் அடிப்படையில் லட்சுமணன் பிரசாத் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 6- ஆம் தேதி இது தொடர்பாக தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆக்கிரம் அடைந்த லட்சுமணன் பிரசாத்தின் மனைவி இளைய மகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் இருந்து வெளியேறி நுங்கம்பாக்கத்தில் தங்கி இருந்து வருகிறார். மேலும், மூத்த மகளையும் தன்னிடம் அழைத்து செல்வதற்கு அவரது மனைவி முயன்று உள்ளார். ஆனால், அதனை லட்சுமணன் பிரசாத் தடுத்து நிறுத்தியுள்ளார். முதல் மகளை தன்னுடன் விட்டுவிட்டு செல்லுமாறு அவர் கூறியதாக தெரிகிறது.

மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை

இதைத் தொடர்ந்து, மூத்த மகள் கீதாவை லட்சுமணன் பிரசாத்திடம் விட்டுவிட்டு இளைய மகளை மட்டும் அவரது மனைவி அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில், மனைவியை பிரிந்து சென்றதால் லட்சுமணன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில், ஏற்பட்ட அழுத்தம் காரணமாக நேற்று இரவு மூத்த மகள் கீதாவை கயிறால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார். தொடர்ந்து, அவரும் கயிறால் தூக்கு போட்டு தொங்கியுள்ளார்.

மேலும் படிக்க: முதல்வர் ஜோசப் விஜய் வெற்றிக்கு எதிர்ப்பு.. திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பு!

தற்கொலை செய்த தந்தையும் பலி

அப்போது, பாரம் தாங்காமல் அந்த கயிறு அருந்ததில் லட்சுமணன் கீழே விழுந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மகளை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதை அவரது மனைவிக்கு வீடியோ கால் மூலமாக காண்பித்துள்ளார்.

மனைவிக்கு வீடியோக கால் செய்து மகளை கொன்ற தந்தை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அலறி அடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்று உள்ளார். இதை தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு உடல் கூராய்க்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பள்ளி வளாகத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: திமுக-வால் தான் தேர்தலில் தோற்று விட்டோம்.. காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பெரும் குற்றச்சாட்டு!

Follow Us