திமுக-வால் தான் தேர்தலில் தோற்று விட்டோம்.. காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பெரும் குற்றச்சாட்டு!
Puducherry Vaithilingam MP : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் இண்டி கூட்டணி தோல்வி அடைந்ததற்கு திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் எம்.பி. பெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் இண்டி கூட்டணி தோல்விக்கு திமுக தான் காரணம் என்று அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வைத்திலிங்கம் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு மாணவர் சமுதாயத்தில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கி நிலையற்ற தன்மையே உருவாக்கியுள்ளது. பல்வேறு குழப்பங்களை செய்து சிபிஎஸ்சி தேர்வு முறையை குழப்பி உள்ளனர். சிபிஎஸ்சி நிர்வாக முறையே தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது. இதன் மூலமாக குளறுபடிகளை மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. நீட் தேர்வில் எப்போதும் தொடரும் குளறுபடிகளை மாணவர்களை கண்டுபிடித்து வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், இது தொடர்பாக பிரதமர் மோடி எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. புதுவை அரசு பின்பற்றி வரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மீதான அடக்கு முறைக்கு காங்கிரஸ் கண்டனம்
உயர்நிலை பள்ளியில் 3- ஆவது மொழியே கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி மாணவர்களின் விருப்பம் வழியாக இருந்த பிரஞ்சு மொழி நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ரங்கசாமி கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டிக்கும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரிக்கு கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.
மேலும்ப படிக்க: மின்தடைக்கு தீர்வு.. ரூ. 15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க உத்தரவு..




மத்திய அரசின் நிதி எதற்கு செலவிடப்பட்டது
ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று முதல்வர் ரங்கசாமி கூறி வருகிறார். மத்திய அரசு தந்த நிதி எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை முதல்வன் விளக்க வேண்டும். முதல்வரின் சர்வாதிகார போக்குக்கு அமைச்சரவையோ, சட்டமன்றமோ தேவையில்லை. அவர் ஒருவர் மட்டுமே நிர்வாகத்தை நடத்துவார். புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை முடிவு செய்து அறிவிக்கும்.
இண்டி கூட்டணி தோல்விக்கு திமுக தான் காரணம்
இந்த இடைத்தேர்தலில் நட்பு போட்டிக்கு வாய்ப்பு இல்லை. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியை திமுக குறைவாக மதிப்பிடுவது தான் தோல்விக்கு காரணம் ஆகும். நாங்கள் நட்பு ரீதியாக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் இனி நான் போட்டியிட போவது இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் இண்டி கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்கியது. அதனால் தோல்விக்கு திமுகவை காரணம் ஆகும். கூட்டணி தலைமையே திமுக எடுத்துக் கொண்டது. கூட்டணி கட்சிகளிடம் தன்னிச்சையாக திமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஐ.யு.எம்.எல் கட்சிக்கு அமைச்சர் ஷாஜகான் கல்லறை கட்டும் வேலையை பார்த்து வருகிறார் – ஜவஹிருல்லா காட்டம்..