ஐ.யு.எம்.எல் கட்சிக்கு அமைச்சர் ஷாஜகான் கல்லறை கட்டும் வேலையை பார்த்து வருகிறார் – ஜவஹிருல்லா காட்டம்..
டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றிருப்பது, இஸ்லாமியர்கள் திமுக மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை என்பதை எடுத்துக்கொள்ளாமல், திட்டமிட்டு திமுக மீது அவதூறு பரப்பப்படுகிறது” என ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஜூன் 16, 2026: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான், தான் சார்ந்துள்ள கட்சியின் அருமை, பெருமைக்கு சமாதி கட்டும் வேலைகளை செய்து வருகிறார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஷாஜகான், “அடுத்த 50 ஆண்டுகளிலும் திமுகவை தொட்டே தீர முடியாது” என குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.யு.எம்.எல் கட்சிக்கு கல்லறை கட்டும் வேலை:
இதுதொடர்பாக பேசிய அவர், “திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் உழைப்பால் வெற்றி பெற்று இன்று அமைச்சரான பிறகும், திமுகவிற்கு எதிராக இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடாகும். மன்னர் ஷாஜகான் மும்தாஜிற்கு கல்லறை கட்டினார். இவரோ, தான் சார்ந்துள்ள கட்சியின் அருமை, பெருமைக்கு சமாதி கட்டும் வேலையை செய்து வருகிறார்” என்றார்.
மேலும் படிக்க: வடமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் நடவடிக்கை – போலீஸ் எச்சரிக்கை..
மேலும், “சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கவில்லை என்று திட்டமிட்டு பரப்பப்படுவது தவறான தகவல். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக அதிகப்படியான வாக்குகள் பெற்றிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இது ஆங்கில நாளிதழ்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
திமுக மீது பரப்பப்படும் சதி:
டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றிருப்பது, இஸ்லாமியர்கள் திமுக மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை என்பதை எடுத்துக்கொள்ளாமல், திட்டமிட்டு திமுக மீது அவதூறு பரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: மின்தடைக்கு தீர்வு.. ரூ. 15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க உத்தரவு..
மேலும், “அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமே தற்போது வரை திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் தடை செய்யப்படாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” எனவும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.