AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வடமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் நடவடிக்கை – போலீஸ் எச்சரிக்கை..

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களும், தங்களிடம் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்கும் முகவரி உள்ளிட்ட முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் நடவடிக்கை – போலீஸ் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jun 2026 18:49 PM IST

ஜூன் 16, 2026: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்:

இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பலர் தனியாகவும், பலர் குடும்பத்தினருடனும் வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இந்த சூழலில், கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 3 வயது பெண் குழந்தையை, அப்பகுதியில் தங்கியிருந்த நான்கு வடமாநில தொழிலாளர்கள் “பிஸ்கட் வாங்கித் தருகிறோம்” என்று கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அருகிலிருந்த முள் புதரில் தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும் படிக்க: மாணவர்களே நோட் பண்ணுங்க.. இந்தாண்டு எத்தனை நாள்கள் லீவு.. அடுத்த சம்மர் லீவு அப்டேட்!

இதையடுத்து, அந்தக் குழந்தை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வடமாநில தொழிலாளி கைது:

இந்த வழக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி பிபின் மிஞ்சி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களையும் முறையாக சேகரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: “பிறப்புறுப்பில் கடுமையான காயம்” 3 வயது குழந்தை பாலியல் கொலையில் ஸ்டான்லி மருத்துவமனை டீன் உடைத்த அதிர்ச்சி உண்மை!

வடமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்க வேண்டும்:

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களும், தங்களிடம் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்கும் முகவரி உள்ளிட்ட முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க தவறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us