மாணவர்களே நோட் பண்ணுங்க.. இந்தாண்டு எத்தனை நாள்கள் லீவு.. அடுத்த சம்மர் லீவு அப்டேட்!
Tamil Nadu School Timetable: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்குமான கால அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளிகளுக்கு 155 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது. 210 நாள்கள் வேலை நாள்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 2027 ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரப்பூர்வ கால அட்டவணையை மாநில பள்ளிக் கல்வித் துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2026- 2027- ஆம் ஆண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு மொத்த வேலை நாட்கள் 210 ஆகும். இதில், 22 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும், இந்த ஆண்டில் பெரும்பாலான சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு தேர்வு செப்டம்பர் 17- ஆம் தேதி தொடங்கி 25- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 26- ஆம் தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை 9 நாட்கள் காலண்டர் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல, டிசம்பர் 16- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.
காலாண்டு – அரையாண்டு தேர்வு விடுமுறை
தொடர்ந்து, டிசம்பர் 24- ஆம் தேதி தொடங்கி ஜனவரி 4- ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால், மாணவர்களுக்கு 11 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட உள்ளன. இந்த ஆண்டில் செப்டம்பர் 4- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை தொடர்ந்து, வரும் சனி மற்றும் ஞாயிறு வாரம் விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதே போல, செப்டம்பர் 14- ஆம் தேதி ( திங்கள்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக இருக்கும் வார விடுமுறையுடன் சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளன.
மேலும் படிக்க: கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!




தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறை
அக்டோபர் மாதம் 19 மற்றும் 20- ஆம் தேதிகளில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை விழா வருவதால் அதற்கு முன்னதாக இருக்கும் வார விடுமுறையுடன் சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. நவம்பர் மாதம் 8- ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் வார விடுமுறையாக இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. இதே போல, பொங்கல் பண்டிகை 15- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படுவதால், தொடர்ச்சியாக 3 ஆட்கள் விடுமுறை வருகிறது.
210 வேலை நாள்கள் 155 விடுமுறை நாள்கள்
இந்த ஆண்டுக்கான கடைசி வேலை நாள் 2027- ஆம் ஆண்டு ஏப்ரல் 23- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. 365 நாட்களில் 210 நாட்கள் வேலை நாளாகவும், 155 நாட்கள் விடுமுறை நாளாகவும், இதில், ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எம்எல்ஏகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் – தொடங்கி வைக்கும் முதல்வர்