AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை.. தங்கம் தென்னரசு தாக்கு!

Former Finance Minister Thangam Thennarasu : தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாக இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், பல்வேறு விமர்சனங்களை அவர் முன் வைத்துள்ளார். விரிவாக பார்க்கலாம்.

தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை.. தங்கம் தென்னரசு தாக்கு!
அமைச்சர் தங்கம் தென்னரசு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 17 Jun 2026 14:40 PM IST

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு இருந்தார். இதில், கடந்த திமுக ஆட்சியில் இரண்டு மடங்கு கடன் வாங்கி இருப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்திற்கு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை புதிது கிடையாது. கடந்த 2001 மற்றும் 2021- ஆம் ஆண்டுகளில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், 2001- ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் நிதிநிலை விவரங்களை உள்ளடக்கியிருந்தது. 2021- ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 15 ஆண்டுகளின் நிதி நிலை விவரங்களை கொண்டதாகும். ஆனால், தற்போது முந்தைய 5 ஆண்டுகளின் நிதி நிலை என கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன. யாரை காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் விவரங்களை வெளியிடவில்லை.

தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை

தவெக அரசின் இயலாமையை மூடி மறைப்பதற்காக வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. தவெக ஆட்சி ஒரு வேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டின் இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை நான் சவாலாக கூறுகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைந்து வாங்கினால் நான் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

மேலும் படிக்க: வீ த லீடர்ஸ் இயக்கம் விரைவில் கட்சியாக மாறும்; முதல் பாட்காஸ்டில் அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்

தவெக அரசின் வெள்ளை அறிக்கை எஸ்கேபிசம்

எங்களிடம் புதிய திட்டம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்லவே ஆளுநர் உரைக்கு முன்னதாக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேபிசம் என்றும் சொல்லலாம். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையே மூடி மறைப்பதற்காக தவெக அரசு முயற்சித்து வருகிறது.

பயிர்கடன் தள்ளுபடி விவகாரத்தில்

பரந்தூர் விமான நிலைய திட்டம் உள்பட தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மூலதன திட்டங்களை நிறுத்தி வைத்து, திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை என்று கூறுகிறது. தவெக அரசு காலை உணவுத் திட்டம் போன்ற தமிழகத்தில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது. தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அனைவரும் பார்த்தோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “கோட் சூட், டிபன் பாக்ஸ் செய்திகள் முக்கியமல்ல!”.. ஆட்சியில் நடப்பதை கவனியுங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

Follow Us