இந்தியாவில் 7 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு அனுமதி.. மிக விரைவில் நகரங்களுக்கு பயணிக்கலாம்!
7 New Bullet Train Routes Approved | இந்தியாவில், புனேவில் தான் முதல் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் புதிய 7 புல்லட் வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜுன் 22 : இந்தியாவில் (India) அதிவேக ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 7 புதிய புல்லட் ரயில் (Bullet Train) வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழித்தடங்களில் சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் 7 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு அனுமதி
மும்பை – புனே, பெங்களூரு – சென்னை, பெங்களூரு – ஐதராபாத், புனே – ஜதராபாத், டெல்லி – லக்னோ, டெல்லி – வாரணாசி, மற்றும் டெல்லி – சிலிகுரி ஆகிய 7 புதிய வழித்தடங்களுக்கு தான் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழித்தடங்களில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்படும் பட்சத்தில், முக்கிய நகரங்கள் இடையேயான பயண நேரம் குறையும். குறிப்பாக மும்பை – புனே இடையே 48 நிமிடங்களும், பெங்களூரு – சென்னை இடையே 73 நிமிடங்களிலும் பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : யோகா என்பது ஆற்றலின் ஒளி – யோகா தினக் கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
2027-ல் பயன்பாட்டு வர உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வழித்தடம்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வழித்தடமான, மும்பை பாரத் ரயில் பாதை பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பாதை மற்றும் போக்குவரத்து 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த நிலையில் தான், மத்திய அரசு தற்போது மேலும் புதிய 7 புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க : NEET: நீட்-யுஜி மறுதேர்வு இன்று.. அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்!
அரசின் இந்த முக்கிய முடிவை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் உறுதி செய்துள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் விரைவில் அமலுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் விரைவானதாக மாறுவது மட்டுமன்றி, மிக விரைவில் நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.