9 மாத குழந்தையை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!
9 Months Old Baby Kidnapped | உத்தர பிரதேசத்தில் 9 மாத பச்சிளம் குழந்தை ஒன்று காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அந்த குழந்தையை 12 வயது சிறுவன் ஒருவன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.
லக்னோ, ஜூன் 21 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh), மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து 12 வயது சிறுவன் ஒருவன், 9 மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை காணாமல் போன நிலையில், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், 9 மாத குழந்தையை 12 வயது சிறுவன் கடத்திச் சென்று வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
9 மாத குழந்தையை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த சிறுவன்
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள குலாரியா கிராமத்தில் 9 மாத பச்சிளம் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை காணாமல் போன நிலையில், பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். நள்ளிரவில் கிராமத்தில் இருந்து சிலர் அருகில் உள்ள வயல்வெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், அப்போதும் அவர்களால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க : பிரதமர் மோடியுடன் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட யோகா தினக் கொண்டாட்டம்
ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை
இந்த நிலையில், நேற்று (ஜூன் 20, 2026) காலை வயல்வெளியில் உள்ள ஒரு தகர கொட்டகையில் உடலில் ரத்த காயங்களுடன் அந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மழை வேண்டி திருமணம் செய்துக்கொண்ட ஆண்கள்.. ஒடிசாவில் வினோத சம்பவம்!
இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிறுவன் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பத்தன்று நன்றாக மது அருந்திய சிறுவன், மொபைலில் ஆபாச படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்று குழந்தையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.