AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பவானிசாகர் பகுதியில் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானை.. விவசாயிகள் வேதனை!

Wild Elephant Damaged Fields In Villages | பவானிசாகர் அருகே காட்டுக்குள் இருந்து வெளியேறிய யானை ஒன்று, அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருக்கும் தோட்டங்களைம் சேதப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் சோகத்தில் உள்ளனர்.

பவானிசாகர் பகுதியில் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானை.. விவசாயிகள் வேதனை!
அட்டகாசம் செய்த யானை
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Jun 2026 08:11 AM IST

பவானிசாகர், ஜுன் 22 : பவானிசாகர் அருகே காட்டுக்குள் இருந்து இறங்கி ஊருக்குள் புகுந்த யானை ஒன்று, அங்கிருந்த தோட்டங்களை சேதப்பட்டுத்தியதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அந்த பகுதியில் அடிக்கடி இத்தகைய யானை தாக்குதல் மற்றும் அட்டகாச சம்பவங்கள் நடைபெறும் நிலையில், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், யானை தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பவானிசாகர் பகுதியில் அதிகரிக்கும் யானை தாக்குதல் சம்பவங்கள்

பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள், குரங்குகள், மான்கள், சிறுத்தை புலிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளில் தண்ணீர் மற்றும் குடிநீர் தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. அந்த வகையில் தான், அந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி தோட்டங்களில் அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இதையும் படிங்க : அமோனியா வாயு கசிவு விபத்து – தொழிலாளர் நலனில் சமரசம் கூடாது – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை

அந்த வகையில், ஜூன் 20, 2026 அன்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வாணிச்சிபாளையம், தொட்டிபாளையம், கொண்டையம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை அந்த காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, தோட்டங்களை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலிகளையும் அது சேதப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அமோனியா வாயு விபத்தில் 2 பேர் பலி: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், யானை காட்டுக்குள் செல்லாமல் அருகில் உள்ள காவிலிபாளையம் குளத்துக்கு சென்று குளித்துக்கொண்டு இருந்துள்ளது. பின்னர் யானை தானகே காட்டுக்குள் சென்று மறைந்துள்ளது. இனி இத்தகைய நிகழ்வு நடக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow Us