AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கள்ளக்காதலன் உடன் உள்ளாசமாக இருக்க தடையாக இருந்த மகன்.. அடித்தே கொலை செய்த தாய்!

Woman Killed Her 3 Years Old Son | தெலங்கானாவில் கள்ளக்காதலன் உடன் உள்ளாசமாக இருந்தபோது அழுதுக்கொண்டே இருந்ததன் காரணமாக, தாயே தனது 3 வயது மகனை அடித்தே கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கள்ளக்காதலன் உடன் உள்ளாசமாக இருக்க தடையாக இருந்த மகன்.. அடித்தே கொலை செய்த தாய்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jun 2026 23:31 PM IST

திருப்பதி, ஜூன் 21 : தெலங்கானாவில் (Telangana) கள்ளக்காதலன் உடன் உள்ளாசமாக இருக்க தடையாக இருந்த 3 வயது மகனை தாய், அடித்தே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக அந்த பெண் நாடகமாடிய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணத்திற்கு பிறகு காதலனுடன் தொடர்பில் இருந்த பெண்

தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டம், தீகுல் பகுதியை சேர்ந்தவர் சுவாமி. இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், 3 வயது மகனும் இருந்துள்ளனர். ஜோதிக்கும் தன்னுடன் படித்த நவீன் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, நவீன் அடிக்கடி ஜோதியின் வீட்டிற்கு சென்று அவருடன் உள்ளாசமாக இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : மழை வேண்டி திருமணம் செய்துக்கொண்ட ஆண்கள்.. ஒடிசாவில் வினோத சம்பவம்!

இந்த நிலையில், சம்பவத்தன்று ஜோதி தனது கள்ளக்காதலன் உடன் உள்ளாசமாக இருந்துள்ளார். அப்போது அவரது மகன் அழுதுக்கொண்டே இருந்துள்ளார். காதலனுடன் உள்ளாசமாக இருப்பதை மகன் தடுத்த நிலையில், ஆத்திரமடைந்த ஜோதி மகனை மிக கடுமையாக தாக்கியுள்ளார். அதில் சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக தனது கள்ளக்காதலனின் பைக்கில் மகனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக நாடகமாடிய ஜோதி

இறந்த மகனின் உடலை ஜோதி வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அது குறித்து கணவன் கேட்டபோது கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அவரது கணவர், மகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் ரத்த கரை இருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு மதிப்புமிக்க ‘லக்சம்பர்க் அமைதி விருது’

இந்த நிலையில், அருகில் இருக்கும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை அவர் சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது ஜோதியின் கள்ளக்காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதை கண்டுபிடித்துள்ளார். இந்த நிலையில், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜோதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது மகனை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us