உபி பயிற்சி மைய தீ விபத்து.. 15 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி!
15 Students Killed In Coaching Center Fire Accident | உத்தர பிரதேசத்தில் மூன்று மாடிகளை கொண்ட பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று (ஜூன் 22, 2026) இந்த பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 15 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
லக்னோ, ஜூன் 23 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) அனிமேஷன் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, மேலும் சில மாணவர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில், உத்தர பிரதேச பயிற்சி மையத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அனிமேஷன் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து – 15 மாணவர்கள் பலி
உத்தர பிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம், அலிகஞ்ச் என்ற பகுதியில் மூன்று மாடிகளை கொண்ட பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் செல்லப்பிராணி கிளினிக், அனிமேஷன் பயிற்சி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில், தான் நேற்று (ஜூன் 22, 2026) மாலை இந்த பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 9 மாத குழந்தையை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!
4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்
இந்த தீ விபத்தில் சிக்கி உடல் கருகி 15 மாணவர்கள் பலியான நிலையில், 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் தீயில் கருகி பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : யோகா என்பது மன நலனுக்கான அறிவியல் – சத்குரு பகிர்ந்த தகவல்
மேலும், தீயில் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 4 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சி மைய தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.