திருவள்ளூர் அமோனியா கேஸ் கசிவு விவகாரம்.. 9 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!
Ammonia Gas Leak Death Toll Rise To 9 | திருவள்ளூரில் மீன், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்டு ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர், ஜூன் 23 : திருவள்ளூரில் (Thiruvallur) அமோனியா கசிவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மீன், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சிக்கல் காரணமாக தொடர் உயிரழப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 23, 2026) பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் இறால் பண்ணையில் அமோனியா கசிவு
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் ஜூன் 20, 2026 அன்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 77 தொழிலாளர்கள் மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மழை




அன்றைய தினமே பலியான 2 தொழிலாளர்கள்
மயக்கமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சம்பவத்தன்றே ஜூவான், மலோத்தி ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 49 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், மீதமுள்ளவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : ” மனமுடைந்து கதறி அழுத வைகோ”.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்யப்பட்டது – துரை வைகோ ஓபன் டாக்
9 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியர்களில் சிலர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான் நேற்று (ஜூன் 22, 2026) சிகிச்சையில் இருந்த மூன்று பெண்கள் பரிதாபமாக பலியாகினர். அதனை தொடர்ந்து நேற்று காலை மற்றும் மாலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் பலியாகினர்.
இவ்வாறு நேற்று வரை 8 பேர் இந்த அமோனியா கசிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள் பலியான நிலையில், இன்று மேலும் பலி எண்ணைக்கை உயர்ந்துள்ளது. அதாவது, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஞ்சிலா சுரின் என்ற 26 வயது மேற்கு வங்க பெண் இன்று உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.