தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த குட்டி யானை.. 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட வனத்துறையினர்!
Baby Elephant Fell Into Well Rescued | கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டம் ஒன்றில் இருக்கும் தண்ணீர் இல்லாத கிணற்றில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது. இந்த நிலையில், வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் மேற்கொண்ட மீட்பு பணிகளுக்கு பிறகு யானை குட்டி மீட்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், ஜூன் 23 : கேரளாவில் (Kerala) கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் போராடி மீட்டுள்ளனர். சுமார் 20 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் குட்டி யானை விழுந்த நிலையில், மூன்று மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டுள்ளனர். இந்த நிலையில், தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
20 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், தண்ணித்தோடு மேக்கானத்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில் 20 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 22, 2026) அதிகாலை ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்த குட்டி யானை ஒன்றி தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
இதையும் படிங்க : கள்ளக்காதலன் உடன் உள்ளாசமாக இருக்க தடையாக இருந்த மகன்.. அடித்தே கொலை செய்த தாய்!
3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறையினர்
குட்டி யானை கிணற்றில் விழுந்த தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி கிணற்றை சமன் செய்துள்ளனர். கிணற்றை சமன் படுத்தி யானை குட்டி வெளியே வருவதற்கான பாதையை உருவாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க : 9 மாத குழந்தையை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!
அவர்கள் திட்டமிட்டபடி, வனத்துறையினர் உருவாக்கிய பாதை வழியாக அந்த குட்டி யானை வெளியே வந்துள்ளது. பிறகு, அந்த குட்டி யானை வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானையை மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.