AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாம்புடன் விளையாடிய தொழிலதிபர்.. விஷம் உடலில் ஏறி பரிதாப பலி!

Businessman Died By Snake Bite | தெலங்கானாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பாம்பை வைத்து விளையாடிக்கொண்டு இருந்த அவர், பாம்பு கடித்த நிலையில், உடலில் விஷம் ஏறி சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகியுள்ளார்.

பாம்புடன் விளையாடிய தொழிலதிபர்.. விஷம் உடலில் ஏறி பரிதாப பலி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Jun 2026 00:06 AM IST

நகரி, ஜூன் 22 : தெலங்கானா (Telangana) மாநிலம், ஐதராபாத் ராஜேந்திர நகர், காத்ரி ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் நவாப் மைதீன் ஹுசைனி. 20 வய்தான இவர் தொழிலதிபராக இருந்து வந்தார். இந்த நிலையில், இவர் மொயினாபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிக்கு நண்பர்கள் உடன் சென்றிருந்துள்ளார். அங்கு ஜூன் 20, 2026 அன்று அதிகாலை ஒரு சிறிய பாம்பு ஒன்று வந்துள்ளது. நவாப் மைதீன், அந்த பாம்பை தனது கைகளில் பிடித்து தனது நண்பர்களை பயமுறுத்தி விளையாடியுள்ளார். ஆனால், அதுவே அவருக்கும் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

பாம்பை வைத்து விளையாடிய தொழிலதிபருக்கு நடந்த கொடூரம்

நவாப் மைதீன், பாம்பை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், அது அவரின் கட்டை விரலை கடித்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாம்பு கடித்தபோதும் கூட அவர் தனக்கு ஒன்றும் ஆகாது என்று அலட்சியமாக இருந்துள்ளார். ஆனால், ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : யோகா என்பது மன நலனுக்கான அறிவியல் – சத்குரு பகிர்ந்த தகவல்

சிகிச்சை பலன் அளிக்காமல் பலியான தொழிலதிபர்

அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கிய நிலையில், அவர் உஸ்மானியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த அந்த தொழிலதிபருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us