AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அரசு பேருந்தில் பயணம்.. சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்த முதல்வர் விஜய்

அரசு பேருந்தில் பயணம்.. சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்த முதல்வர் விஜய்

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Jun 2026 14:34 PM IST

வழக்கமாகப் பொது நிகழ்ச்சிகளில் செல்பி எடுத்து மகிழும் முதல்வர் விஜய், இந்த அரசுப் பேருந்து பயணத்தின் போது சற்று வித்தியாசமாகச் செயல்பட்டார். பேருந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது, சாலையின் தரம் மற்றும் புதிய பேருந்தின் பயண அனுபவம் எவ்வாறு உள்ளது என்பதைத் தனது கைப்பேசி மூலம் வீடியோவாக அவரே பதிவு செய்தார்.

சென்னையில் இன்று 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் விஜய், பேருந்திலேயே கலங்கரை விளக்கம் வரை பயணித்து அசத்தியுள்ளார். மேலும், பேருந்தில் நடத்துனரிடம் டிக்கெட் எடுத்ததோடு, பயண அனுபவத்தைத் தனது கைப்பேசியில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய், மெரினா கடற்கரைச் சாலை வழியாகக் கலங்கரை விளக்கம் வரை பயணித்தார். பேருந்திற்குள் சென்ற அவர், சாதாரணப் பயணியைப் போல நடத்துனரிடம் சரியான சில்லறை வழங்கி உரிய பயணச் சீட்டை பெற்றுக் கொண்டார். அதன் பின், அந்த நடத்துனரைத் தனது அருகிலேயே அமரவைத்து, போக்குவரத்துச் சேவைகள் மற்றும் தொழிலாளர்களின் நலம் குறித்து மிகவும் கனிவோடு கலந்துரையாடினார்.

Follow Us