AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை.. கட்சி அலுவலகத்தில் நீக்கப்படாத புகைப்படம்.. கிளம்பிய சர்ச்சை!!

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை.. கட்சி அலுவலகத்தில் நீக்கப்படாத புகைப்படம்.. கிளம்பிய சர்ச்சை!!

Sekaran S
Sekaran S | Updated On: 24 Jun 2026 14:29 PM IST

இந்நிலையில், அவர் கட்சியை விட்டு வெளியேறி 2 வாரங்களுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும், கோவை மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அண்ணாமலையின் புகைப்படம் இன்னும் காட்சியளிக்கிறது. கட்சியில் இருந்து முழுமையாக விலகிய ஒரு முன்னாள் தலைவரின் புகைப்படம், கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் தொடர்ந்து நீடிப்பது தொண்டர்கள் மத்தியில் குழந்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அவரது புகைப்படம் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை, சக கட்சி நிர்வாகிகளுடனான கருத்து வேறுபாடு மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக சமீபத்தில் அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். மேலும், வீ தி லீடர்ஸ் என்ற என்.ஜி.ஓ மூலம் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வரும் அவர், புதிய அரசியல் இயக்கத்தை முன்னெடுக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் கட்சியை விட்டு வெளியேறி 2 வாரங்களுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும், கோவை மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அண்ணாமலையின் புகைப்படம் இன்னும் காட்சியளிக்கிறது. கட்சியில் இருந்து முழுமையாக விலகிய ஒரு முன்னாள் தலைவரின் புகைப்படம், கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் தொடர்ந்து நீடிப்பது தொண்டர்கள் மத்தியில் குழந்தை ஏற்படுத்தியுள்ளது.

பேனர்களை மாற்றுவதில் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மெத்தனம் காட்டுகிறார்களா? அல்லது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகிறார்களா? என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. தற்போதுவரை இதுகுறித்து பாஜக தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், புதிய கட்டமைப்பை உருவாக்கி வரும் பாஜக தலைமை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பழைய பேனர்களை அகற்றுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Published on: Jun 24, 2026 02:27 PM
Follow Us