இனி மோசடிக்காரர்களிடம் இருந்து மெசேஜ் வந்தால் வாட்ஸ்அப் எச்சரிக்கும் – அறிமுகமாகும் புதிய அம்சம்
மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க வாட்ஸ்அப் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் மெசேஜை ஓபன் செய்வதற்கு முன்பே இது உங்களை எச்சரிக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும் வகையில் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க வாட்ஸ்அப் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் படி மெசேஜை ஓபன் செய்வதற்கு முன்பே இது உங்களை எச்சரிக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும் வகையில் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அறிமுகமில்லாத எண்ணிலிருந்து செய்தி வரும்போது இந்த அம்சம் உங்களை எச்சரிக்கும்.
பயனர்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. அதிகரிக்கும் சைபர் மோசடிகள் மற்றும் இணையத் தாக்குதல்களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க பல பிரைவசி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்குகிறது. தற்போது, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பான மாற்றங்களைக் கண்காணிக்கும் ஒரு தளம், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து செய்தி வரும்போது தோன்றும் புதிய வார்னிங் நோட்டிஃபிகேஷன் வெளியிடும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இருவருக்கும் கிடைக்கும்.
இதையும் படிக்க : அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!




அறிமுகமில்லாத எண்களுக்கான மெசேஜ்களுக்கான வார்னிங் மெசேஜ்
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான இந்த புதிய அம்சம் குறித்த விவரங்களை WABetaInfo வெளியிட்டுள்ளது. அறிமுகமில்லாத ஒருவருடனான சாட்டை திறப்பதற்கு முன், இரு தளங்களிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி ஒரு எச்சரிக்கை செய்தியைக் காண்பார்கள். மேலும், அந்த போன் நம்பர் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், நீங்கள் உறுப்பினராக உள்ள எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் அந்த எண் இல்லையென்றால் அது குறித்த தகவலையும் இந்த எச்சரிக்கை தெரிவிக்கும்.
இந்த எச்சரிக்கையுடன், உரையாடலைத் தொடரவும் மற்றும் உரையாடலை ரத்து செய்யவும் ஆகிய இரண்டு ஆப்சன்கள் உங்களுக்கு வழங்கப்படும். தனிப்பட்ட தகவல்கள் அல்லது பாஸ்வேர்டுகளை சொல்லச்சொல்லி ஏமாற்றவோ அல்லது பணம் அனுப்பக் கோரவோ மோசடி செய்பவர்கள் முயற்சிக்கலாம் என்று அந்த எச்சரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதையும் படிக்க : பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
பயனர் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் பல அம்சங்களில் பணியாற்றி வருகிறது. விரைவில், ஹோம் ஸ்கிரீனில் வைக்கக்கூடிய பிரத்யேக வாய்ஸ் நோட் விட்ஜெட்டை நீங்கள் செயலியில் காணலாம். கூடுதலாக, ஐபோன் பயனர்களுக்காக ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையிலான உரைச் செய்தி டெக்ஸ்ட் மெசேஜ் வசதியும் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதில் இருந்து பயனர்களை பாதுகாக்க வாட்ஸ்அப் இந்த நடவடிக்ககைளில் இறங்கியுள்ளது.