AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கேப்ஷன் பதிவிடலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த அட்டகாசமான அம்சம்!

New Feature In Instagram Caption | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்கு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஒவ்வொரு ஸ்லைடுக்கும் ஒரு கேப்ஷன் பதிவிடும் அசத்தல் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கேப்ஷன் பதிவிடலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த அட்டகாசமான அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Jun 2026 16:01 PM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி உலக நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை பெற முடியும். இவ்வாறு பல சேவைகளை வழங்கும் ஒரே செயலியாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் பயனர்கள் மத்தியில் இது தனக்கென தனி இடம் பிடித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஒவ்வொரு ஸ்லைடுக்கும் கமெண்ட் பதிவிடலாம்

இவ்வாறு இன்ஸ்டாகிராம் அதிக மக்களால் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அதில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், தற்போது ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஒவ்வொரு ஸ்லைடுகளுக்கும் கேப்ஷன் பதிவிடும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அம்சமாக இஸ்டாகிராம் இதனை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : புது படம்.. கேள்வித்தாள் லீக்.. டெலிகிராமில் ஏன் குற்றம் நடக்கிறது தெரியுமா?

புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன?

இந்த அம்சம் அறிமுகம் செய்வதற்கு முன்னதாக ஒரு போஸ்டில் ஒரே ஒரு கேப்ஷன் மட்டுமே பதிவிட முடியும். ஒருவேளை பகிரும் ஒவ்வொரு படத்திற்கும் கேப்ஷன் பதிவிட வேண்டும் என்றால் அந்த புகைப்படத்திலேயே எடிட் செய்து தான் பதிவிட முடியும். ஆனால், இனி அந்த கவலை இல்லை. இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒரு போஸ்டில் பதிவிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் தனித்தனியாக கேப்ஷன் பதிவிடலாம்.

இதையும் படிங்க : சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!

7,5000 வார்த்தைகள் வரை கேப்ஷனில் பதிவிடலாம்

முன்பு ஒரு போஸ்டுக்கு வெறும் 10 புகைப்படங்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கி வந்த இன்ஸ்டாகிராம், அதனை 20 ஸ்லைடுகளாக உயர்த்தியது. இந்த நிலையில், ஒவ்வொரு போஸ்டுக்கும் 378 வார்த்தைகள் வரை கேப்ஷன் பதிவிடலாம். அந்த வகையில் ஒருவர் 20 ஸ்லைடுகள் உள்ள போஸ்டில் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கேப்ஷன் பதிவிட விரும்பினால் அவர் சுமார் 7,560 வார்த்தைகள் வரை கேப்ஷன் பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us