AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

Flipkart Announced Back To Campus Sale | பிளிப்கார்ட் நிறுவனம் அவ்வப்போது தனது சேலை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Jun 2026 16:14 PM IST

உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதுதான் பிளிப்கார்ட் (Flipkart). இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இதன் காரணமாக,  இந்த நிறுவனம் அவ்வப்போது தனது சேலை அறிவிக்கும். அந்த வகையில் தான் தற்போது பேக் டு கேம்பஸ் சேலை (Back To Campus Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பேக் டு கேம்பஸ் சேலில் என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்

புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் நபர்களுக்கு பிளிப்கார்டின் இந்த சேல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம், இந்த சேலில் பல ஸ்மார்ட்போன்களுக்கு அடிப்படை தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.3,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தையும் பயன்படுத்தும்போது பிரீமியம் போன்கள் கூட மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களின் விலைக்கு வந்துவிடும்.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்!

வட்டி இல்லாத மாத தவணை வசதி வழங்கப்படுகிறது

பிளிப்கார்டின் இந்த சேலில் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு மூன்று, ஆறு மற்றும் ஒன்பது மாத கால அளவுகளில் வட்டி இல்லாத மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்கள் வங்கிக்கு கூடுதல் வட்டி செலுத்தாமல், மாத பட்ஜெட்டை சரியாக நிர்வகிக்க பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : WhatsApp : ஹோம் ஸ்கிரீனில் இருந்த வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.. விரைவில் வரும் அட்டகாசமான அம்சம்!

ஸ்மார்ட்போன்களுக்கான சில அட்டகாசமான சலுகைகள்

  • ஐபோன் 15, ரூ.79,900 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில், ரூ.66,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • மோட்டோரோலா எட்ஜ் 50, ரூ.29,999 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில், ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • போக்கோ எக்ஸ்6 ப்ரோ, ரூ.30,999 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் ரூ.26,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சாம்சங் கேலக்ஸி எஸ்23, ரூ.64,999 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் ரூ.47,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us