AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்!

Vivo Y6e Smartphone Launched In China | விவோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ ஒய்6இ 5ஜி என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்!
விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jun 2026 21:57 PM IST

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் விவோ (Vivo). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போனை (Vivo Y6e Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்

விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4ஜென் 2 சிட்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த சிப்செட் ஸ்மார்ட்போனுக்கு மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் கேமர்களை கவரும் வகையில், சில அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!

விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

13 எம்பி ரியர் கேமரா உடன் இந்த விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி மிக தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதுமட்டுமன்றி, செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்காக மட்டுமே எம்பி 5 கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!

இதுதவிர இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி பிளஸ் மற்றும் பல அட்டகாசமான கேமரா அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us