WhatsApp : ஹோம் ஸ்கிரீனில் இருந்த வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.. விரைவில் வரும் அட்டகாசமான அம்சம்!
WhatsApp Voice Message From Home Screen | வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஹோம் ஸ்கிரீனில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரதான செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. பெரும்பாலான மக்களின் நாள் தொடங்குவது முதல் முடிவது வரை வாட்ஸ்அப்பில் தான் உள்ளது. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ்அப்பில் புதிய புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மேலும் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி ஹோம் ஸ்கிரீனில் இருந்தே வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு அட்டகாசமான அம்சத்தை தான் வாட்ஸ்அப் தற்போது சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் வாய்ஸ் மெசேஜை மிக விரைவாக அனுப்ப முடியும். அதாவது ஹோம் ஸ்கிரீனில் (Home Screen) இருந்தே வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். இதுவரை வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், வாஸ்ட்அப் செயலிக்குள் சென்று மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்த நிலையில், இனி ஹோம் ஸ்கிரீனில் இருந்தே அனுப்பும் வசதி அறிமுகம் செய்யபட உள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!




நேரத்தை மிச்சப்படுத்தும் ஹோம் ஸ்கிரீன் வாய்ஸ் மெசேஜ் அம்சம்
இந்த புதிய அம்சத்தில் ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனில் புதிய விட்ஜெட் ஒன்று தோன்றும். அதனை பயன்படுத்தி, ஹோம் ஸ்கிரீன் மூலமே ஒருவரால் மிக எளிதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும்.
ஹோம் ஸ்கிரீன் மூலம் எப்படி அனுப்புவது
- ஹோம் ஸ்கிரீனில் தோன்றும் விஜ்டெட்டை கிளிக் செய்ய வேண்டும்.
- என்ன பேச நினைக்கிறார்களோ அதனை வாய்ஸ் ரெக்கார்டு செய்ய வேண்டும்.
- பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நபரை தேர்வு செய்ய வேண்டும்.
- அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் வாய்ஸ் மெசேஜை அனுப்பி விடலாம்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் – அப்படி என்ன ஸ்பெஷல்?
மேற்குறிப்பிட்ட இந்த முறைப்படிட் வாட்ஸ்அப்பில் வரவுள்ள விட்ஜெட் அம்சத்தை பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரே நேரத்தில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.