16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கடனா அரசு அதிரடி நடவடிக்கை!
Social Media Ban For Children | சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். மன ரீதியாகவும் அவர்கள் சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கனடா அரசு தடை விதித்துள்ளது.
உலக அளவில் மக்கள் இடையே சமூக ஊடகங்களின் (Social Media Platforms) பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமன்றி, சிறுவர்களும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளியில் சில டாஸ்குகளுக்காக ஸ்மார்ட்போன் தேவைப்படும் நிலையில், அதனை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பள்ளி மாணவர்கள் மத்தியில், குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மத்தியில் சமூக ஊடக பயன்பாடு மிகவும் ஆபத்து மிக்கதாக உள்ளது. எனவே தான், சமூக ஊடகங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து சிறுவர்களை காப்பாற்ற கனடா அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது, 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடனாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
சமீப காலமாக சிறுவர்கள் சமூக ஊடகங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது அவர்களின் மனநிலையை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தான், சிறுவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கனடா அரசு ஒரு புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதாவது, 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த தடை அனைத்து செயலிகளுக்கும் பொருந்தாது.




இதையும் படிங்க : பிஎஸ்என்எல்லின் அலட்சியத்தால் ரூ.87 லட்சம் மோசடி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காரணம், கடனா அரசின் விதிமுறைகளை பின்பற்றும் செயலிகளுக்கு அந்த நாட்டு அரசு இதில் விலக்கு அளித்துள்ளது. அந்த செயலிகளை சிறுவர்கள் பயன்படுத்துவதில் எந்தவித தடையும் இல்லை. முதன் முதலில் ஆஸ்திரேலியா அரசு இந்த சட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், தற்போது கனடா அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு செயலிகளை கண்காணிக்க துறை
சமூக ஊடக செயலிகளை போலவே செயற்கை நுண்ணறிவு செயலிகளான ஏஐ சாட்பாட் செயலிகளையும் பாதுகாப்பானவையாக மாற்ற கடனா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஏஐ செயலிகளை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் ஏஐ சாட்பாட்களை உருவாக்குகின்றனவா என்பதை கண்காணிக்கும்.