இந்திய சாலைகளில் பைக்கில் செல்லும் டிரம்ப்.. இணையத்தில் வைரலாகும் டிரம்ப் பகிர்ந்த ஏஐ வீடியோ!
America President Donald Trump Shares AI Video Of Him | சமூக ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் ஏஐ வீடியோக்கள் தான் நிறைந்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ ஒன்றை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக அளவில் உள்ள பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அவ்வாறு பகிரப்படும் செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாகி, பேசுபொருளாக மாறுவதும் உண்டு. அந்த வகையில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏஐ வீடியோ ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்த ஏஐ வீடியோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் தான் உலகத்தின் மிகச்சிறந்த தலைவர். தன்னை அனைவருக்கும் பிடிக்கும் என பலமுறை பேசியுள்ளார். அந்த வகையில் தற்போது ஏஐ வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ டிரம்பை அனைவருக்கும் பிடிக்கும் என்பது போலும், எங்கு சென்றாலும் டிரம்பை அனைவரும் நேசிப்பார்கள் என்ற கோணத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை தான் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




இதையும் படிங்க : 6,500 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஜியோமி 17டி ஸ்மார்ட்போன்!
இணையத்தில் வைரலாகும் டிரம்பின் வீடியோ
Trump actually posted this AI slop video at 8 am this morning. This is not normal. This is someone who is clearly mentally deranged. Impeach and remove the felon ASAP. pic.twitter.com/mevQ5PDS65
— Harry Sisson (@harryjsisson) June 6, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய சாலைகளில் பைக்கிள் பயணம் செய்வது, காட்டுக்குள் சிங்கத்தின் மீது பயணம் செய்வது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி, அவர் மேலும் பல உலக நாடுகளுக்கு பயணம் செய்வது தொடர்பான காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவுக்கு நான் எங்கு சென்றாலும், அவர்கள் டொனால்ட் டிரம்பை விரும்புகின்றனர். மெக்சிக்கோவிலும் டொலால்ட் டிரம்பை விரும்புகின்றனர், இத்தாலியிலும் டொனால்ட் டிரம்பை விரும்புகின்றனர் என்பது தொடர்பான வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.