AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதில் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Benefits of Restarting Smartphone | ஸ்மார்ட்போனை சில ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தும்போது மெமரி சிக்கல், செயல்திறன் குறைவது உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும். இந்த நிலையில் தான், ஸ்மார்ட்போனை அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதில் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Jun 2026 20:53 PM IST

தற்போதைய கால சூழலில் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்தாத நபர்களை பார்க்கவே முடியாது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஒருவரை ஒருவர் தொடர்ப்புக்கொள்வது, தகவல் பரிமாற்றம், கட்டணங்கள் செலுத்துவது என அனைத்து சேவைகளுக்கும் ஸ்மார்ட்போன் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில், எப்போதாவது ஸ்மார்ட்போன் செயல்படாமல் போனால் என்ன செய்வது என தெரியாமல் போய்விடும். இவ்வாறு ஸ்மார்ட்போன் செயல்படாமல் போவதற்கு ஹேங் ஆவது அல்லது சீக்கரிமே சார்ஜ் தீருவது தான் மிகப்பெரிய காரணமாக இருக்கும். இந்த நிலையில், ஒரே ஒரு ரீஸ்டார்ட் (Restart) செய்வதன் மூலம் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக உள்ள ரீஸ்டார்ட்

ஸ்மார்ட்போனை புதியதாக பயன்படுத்தும்போது அதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, மெமரி சிக்கல், செயல்திறன் குறைவது உள்ளிட்டவற்றை பயனர்கள் எதிர்க்கொள்ள நேரிடும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். இதுமட்டுமன்றி, ஸ்மார்ட்போன் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு ரீஸ்டார்ட் தீர்வு வழங்குகிறது.

இதையும் படிங்க : யுபிஐ மோசடிகளுக்கு செக்.. அசத்தல் அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மெமரி சுத்தம்

ஸ்மார்ட்போனை அதிக காலம் பயன்படுத்துவதால் செயலிகளில் தற்காலிகள் கோப்புகள் தேங்கிவிடும். இது ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை சீக்கிரமே தீர்த்துவிடும். இதன் காரணமாக ஸ்மார்போனின் செயல்திறன் மெல்ல மெல்ல குறைய தொடங்கும். இந்த நிலையில் தான், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற கோப்புகள் அழிந்து, பிராசசர் புதுப்பிக்கப்படும்.

இதையும் படிங்க : 6,500 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஜியோமி 17டி ஸ்மார்ட்போன்!

மென்பொருள் பிரச்னை

மென்பொருள் குறைபாடுகள் மற்றும் பிழைகள் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் மிக அரிதான சிக்கல்களாக உள்ளன. அவற்றால் ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகள் செயலிழப்பது, ஹேங் ஆவது உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

பேட்டரியின் ஆயுள் மேம்படும்

ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் ஆயுள் காலப்போக்கில் பாதிப்புக்கு உள்ளாகலாம். இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரியின் செயல்திறன் குறைந்து, விரைவாக சார்ஜ் காலியாகும். இந்த நிலையில், அவ்வப்போது ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் பேட்டரியை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் செயலிகள் அனைத்தும் அகற்றப்படும்.

Follow Us