பிஎஸ்என்எல்லின் அலட்சியத்தால் ரூ.87 லட்சம் மோசடி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக டூப்ளிகேட் சிம் கார்டு மூலம் ரூ.87 லட்சம் அளவுக்கு மோசடி நடைபெற்றது. இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு ரூ.55 லட்சம் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் அலட்சியம் காரணமாக டூப்ளிகேட் சிம் கார்டு மூலம் ரூ.87 லட்சம் அளவுக்கு மோசடி நடைபெற்றது. இது தொடர்பான வழக்கில கர்நாடக உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு ரூ.55 லட்சம் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஸ்ரீ பசவேஸ்வர பட்டண சகாரா என்ற கூட்டுறவு வங்கி, கனரா பேங்க்கில் அக்கவுண்ட வைத்திருந்திருக்கிறது. இந்த கணக்கிற்கு கூட்டுறவு வங்கியின் பெயரில் பிஎஸ்என்எல் சிம் பெறப்பட்டு அதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி பெற பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
மோசடி நடந்தது எப்படி?
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வங்கியின் அனுமதி இல்லாமல் நடைபற்ற பரிவர்த்தனைகள் மூலம் மொத்தமாக ரூ.87.7 லட்சம் மோசடி நடைபெற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வங்கியின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் தொடர்புடைய டூப்ளிகேட் சிம் கார்டை பெங்களூருவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டூப்ளிகேட் சிம் மூலம் வங்கி கணக்கிற்கு வரும் ஓடிபிகளை மோசடி நபர்கள் பெற்றுள்ளனர். பின்னர் அந்த ஓடிபியை பயன்படுத்தி வங்கியில் உள்ள பணத்தை சட்டவிரோமாக கையாண்டுள்ளனர்.
இதையும் படிக்க : யுபிஐ மோசடிகளுக்கு செக்.. அசத்தல் அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?




இந்த மோசடியில் இழந்த தொகையில் ரூ.30 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் மேலும் ரூ.7.12 லட்சம் மீட்கப்பட்டது. இருப்பினும் வங்கிக்கு ரூ.50 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நதிபதி சுராஜ் கோவிந்தராஜ், சிம் வழங்கும் முன் பிஎஸ்என்எல் சரியான அடையாள சரிபார்ப்பை மேற்கொள்ளவில்லை என கடுமையாக குறிப்பிட்டார்.
மேலும் வாடிக்கையாளர் அல்லாத ஒருவரிடம் டூப்ளிகேட் சிம் கிடைத்திருப்பது பாதுகாப்பு முறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது என்ற நீதிபதி, வங்கி மற்றும் நிதி அமைப்புகளுடன் தொடர்புடைய மொபைல் எண்ணை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி
இந்த நிலையில் வங்கி காப்பீடு திட்டங்கள் மூலம் இழந்த தொகையில் குறிப்பிட்ட அளவு மீட்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் மீது அபராதம் விதிக்கக் கூடாது என்று அந்நிறுவனத்தின் சார்பாக கருத்து முன் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் காப்பீடு எடுத்திருந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டதை மாற்ற முடியாது என்ற நீதிமன்றம் ரூ.50, 50,762 இழப்பீடு வழங்கவும், வங்கியின் நற்பெயருக்கு பாதிப்புக்கு களங்கம் ஏற்படுத்திய வகையில் கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 2019 பிப்ரவரி 7 முதல் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் 9 சதவிகிதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.