Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாய்ஸ் ஓவர் வைஃபை வசதியை அறிமுகம் செய்த BSNL.. இனி தடையற்ற இணைய சேவையை பெறலாம்!

BSNL Introduced Voice Over Wi Fi | அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாய்ஸ் ஓவர் வைஃபை என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் எந்த இடத்திலும் தடையற்ற இணைய வசதியை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

வாய்ஸ் ஓவர் வைஃபை வசதியை அறிமுகம் செய்த BSNL.. இனி தடையற்ற இணைய சேவையை பெறலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jan 2026 14:41 PM IST

டெல்லி, ஜனவரி 02 : இந்தியாவின் முதன்மையான மற்றும் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நாடு முழுவதும் வைஃபை அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை (Voice Over Wi-Fi) என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. புத்தாண்டு சிறப்பாக பிஎஸ்என்எல் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த வாய்ஸ் ஓவர் வைஃபை அம்சம் என்றால் என்ன், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாய்ஸ் ஓவர் வைஃபை அம்சத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்என்

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அம்சம் தற்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இந்த அம்சம் சவாலான சூழல்களிலும் தடையற்ற மற்றும் உயர்தர இணைப்பை வழங்குவதை உறுதி செய்யும். இந்த அம்சத்தின் சிறப்பு என்னவென்றால் வைஃபை நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்பவும், மற்றவர்களிடம் இருந்து பெறவும் முடியும்.

இதையும் படிங்க் : ‘ஹேப்பி நியூ இயர்’ மெசேஜ் உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் – எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்

கடினமான பகுதிகளுக்கும் தடையற்ற இணைய வசதியை வழங்கும்

இந்த வாய்ஸ் ஓவர் வைஃபை அம்சம் வீடுகள், அலுவகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற மொபைல் சிக்னல் கிடைக்காத சவாலான மற்றும் குறுகலான இடங்களுக்கும் சீராக மற்றும் தெளிவான வைஃபை வசதியை வழங்குவதை இந்த அம்சம் உறுதி செய்திறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அசத்தலான அம்சத்திற்கு கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

இந்த அம்சத்தை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

இந்த அம்சத்தை பயன்படுத்த பிஎஸ்என்எல் பயனர்கள் ஒரு சிறிய மாற்றத்தை மட்டும் செய்தால் போதும். அதாவது, ஸ்மார்ட்போனின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று வைஃபை காலிங் என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த மாற்றத்தை மேற்கொண்ட பிறகு பயனர்கள் இந்த அம்சத்தை பெற முடியும். ஏற்கனவே ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஏராளமான பொதுமக்கள் அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய வசதி மேலும் பயனர்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.