தனுஷ் கிட்ட அத அப்பவே சொன்னேன் – நித்தியா மேனன் பகிர்ந்த விஷயம்!
Nithya Menen on Thai Kizhavi Remark to Dhanush: தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நித்தியா மேனன். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் தனுஷ் குறித்தும், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகை நித்தியா மேனன் (Nithya Menen) மலையாளம் சினிமாவின் மூலம் திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமானவர். தனது சிறுவயதிலிருந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இன்று இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் இட்லி கடை (Idli Kadai). நடிகர் தனுஷ் (Dhanush), இயக்கி நடித்திருந்த இப்படத்தில் மெயின் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார்.
உண்மையை சொல்லப்போனால், தனுஷ் மற்றும் நித்தியா மேனன் காம்போ படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய நித்தியா மேனன், திருச்சிற்றம்பலம் படத்தின்போது தனுஷிடம் சொன்ன விஷயம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஸ்ரீதேவியின் அருகே இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா? பிரபல ஹீரோவின் மனைவி இவர்!!
திருச்சிற்றம்பலம் படத்தின் போது தனுஷிடம் சொன்ன விஷயம் குறித்து நித்தியா மேனன் :
அந்த நேர்காணலில் பேசிய நித்தியா மேனன், அதில் “திருச்சிற்றம்பலம் படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷிடம் நான் சொன்னேன், என்ன ஐஸு, கண்மணினு கூப்பிட்ட ரசிகர்கள் எல்லாருமே இனி தாய் கிளவி-னு கூப்பிடுவாங்க. எனக்கு வேற பெரு மாத்துங்கனு சொன்னேன்.
இதையும் படிங்க: பீச் வியூவில்.. ரூ 45 கோடி மதிப்புள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் வீடு.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
எப்போதுமே எனது படங்கள் வெற்றியடையும்போது அந்த பெயர்தான் மக்களின் மனதில் பதிந்திருக்கும். சாதாரணமாக எல்லா படத்திலும் எனது பெயர் நல்ல இருக்கும், ஆனால் இனிமேல் என்ன தாய் கிளவி-னு கூப்பிடுவாங்கனு தனுஷிடம் நான் சொல்லியிருந்தேன்” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார்.
நடிகை நித்தியா மேனனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை நித்தியா மேனன் இறுதியாக தமிழில் தனுஷின் இயக்கத்தில் இட்லி கடை படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என கூறலாம். ஆனால் புதிய திரைப்படத்திற்கான கதையை அவர் கேட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் அவர் நடிக்கவுள்ள புது திரைப்படங்களின் அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.