AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பீச் வியூவில்.. ரூ 45 கோடி மதிப்புள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் வீடு.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Pooja Hegdes Luxury Mumbai Home: தென்னிந்திய சினிமாவில் புகப்பெற்ற நடிகையாக இருந்துவருபவர் பூஞ்ஜ் ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்து அசத்திவருகிறார். இவர் கிட்டத்தட்ட ரூ 45 கோடி மதிப்பிலான வீடு ஒன்று வைத்திருக்கும் நிலையில், அதன் ஸ்பெஷல் விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

பீச் வியூவில்.. ரூ 45 கோடி மதிப்புள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் வீடு.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
பூஜா ஹெக்டே ஆடம்பர இல்லம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Jul 2026 15:16 PM IST

கோலிவுட் சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நாயகியாக நடித்தது அசத்திவருபவர் பூஜா ஹெக்டே (Pooja Hegde). இவர் தமிழ் சினிமாவில் முதல்வர் விஜயின் (CM VIjay) பீஸ்ட் (Beast) படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர். இதன் பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் முதல்வர் விஜய் இறுதியாக நடித்திருந்த ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் இவரே அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இதில் கயல் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை இவர் கவர்ந்திருந்தார். அந்த வகையில், நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் கிட்டத்தட்ட ரூ 45 கோடி மதிளிப்பான பீச் வியூ வீடு ஒன்று வைத்துள்ளாராம். அதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

நடிகை பூஜா ஹெக்டேவின் இல்லத்தின் சிறப்புகள் :

பூஜா ஹெக்டே, மும்பையின் பாந்த்ராவில் என்ற இடத்தில் வசித்துவருகிறார். தகவல்களின்படி, அவர் 2004ம் ஆண்டில் குடியேறிய ரூ. 45 கோடி மதிப்பிலான, 4,000 சதுர அடி பரப்பளவுள்ள கொண்டதாம். முழுவதும் வெள்ளை நிற உள் அலங்காரங்கள், ஏராளமான பசுமையான செடிகள், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற வேலைப்பாடுகள் மூலம் வெளிப்படும் வண்ணங்கள் மற்றும் நேர்த்தியான சாதனங்களுடன், இந்த வீடு அவர் ஓய்வெடுத்து, இயல்பாக இருக்கக்கூடிய ஒரு வசதியான வீடாகும். அண்மையில் விளம்பர நேர்காணல் ஒன்றில், தனது இல்லத்தை பற்றி அவர் தெரிவித்திருக்கிறார்.

பூஜா ஹெக்டேவின் வீட்டினுள் இருக்கும் சிறப்புகள் :

பூஜா ஹெக்டேவின் வீட்டு நுழைவாயிலில், முழுவதும் வெள்ளை நிறச் சுவர்களால் சூழப்பட்ட ஒரு பச்சை நிறக் கதவு உள்ளது. இது ஒரு லண்டன் பாணி நுழைவாயில். அண்ட் விளம்பர நேர்காணலில் பூஜா ஹெக்டே, “இந்த வீடு அன்பின் உழைப்பால் கட்டப்பட்டது போல் உணர்கிறேன்,” என்று அவர் கூறியிருந்தார். மேலும், கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு ஒப்பந்தக்காரரும் மிகுந்த முயற்சி எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: தனுஷின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் ஓம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் – அப்டேட் இதோ!

பூஜா ஹெக்டேவின் இல்லம் குறித்து இணையத்தில் பரவிவரும் வீடியோ பதிவு:

நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் வசித்துவரும் நிலையில், பான் இந்திய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார். மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு குறைந்தபட்சம் ரூ 6 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

Follow Us