Pooja Hegde: சினிமாவில் வெற்றி தோல்விகள்.. மனம் திறந்து பேசிய பூஜா ஹெக்டே!
Pooja Hegde About Successes And Failures: தென்னிந்திய சினிமாவில் தற்போது சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் பூஜா ஹெக்டே. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து புது படங்கள் உருவாகிவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் பேசுகையில் பூஜா ஹெக்டே, சினிமாவில் வெற்றி தோல்விகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் தயாராகி வெளியாகாமல் இருக்கும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படமான ஜன நாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஏற்கனவே பீஸ்ட் (Beast) படத்தில் ஜோடியாக நடித்திருந்த நிலையில், 2வது முறையாக ஜன நாயகன் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த ஜன நாயகன் படமானது இன்னும் சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது. இந்த படமானது வரும் 2026 ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக தெலுங்கில், நடிகர் துல்கர் சல்மானின் DQ41 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.
தமிழில் பூஜா ஹெக்டே பீஸ்ட், ரெட்ரோ (Retro) போன்ற படங்கள் மற்றும் மோனிகா பாடலில் நடனமாடியும் அவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்காததால், சூப்பர் வுமன் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவந்தது. அந்த வகையில் அதற்கு விளக்கமளித்து பூஜா ஹெக்டே பேசியுள்ளார்.




இதையும் படிங்க: தனது பெண் குழந்தைக்கு பெயரிட்ட அட்லீ – பிரியா தம்பதி.. என்ன பெயர் தெரியுமா?
சினிமாவில் வெற்றி மற்றும் தோல்வி குறித்து பூஜா ஹெக்டே பேச்சு:
அதில் பூஜா ஹெக்டே பேசுகையில், “சினிமாவை பொறுத்தவரையில் வெற்றி மற்றும் தோல்வி என்பது சரிசமமான ஒன்று. நானும் அப்படித்தான். வெற்றி, தோல்விகளையும் கடந்துதான் பயணிக்கிறேன். எனவே எதுவும் எனது மனநிலையை கவலைப்படுத்திவிடாது. வழக்கம்போலவே படங்களில் தொடர்ந்து பிசியாக நடிக்கிறேன். மற்றபடி எந்த யூகங்களுக்கு நான் பதிலாக விரும்பவில்லை” என அதில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: மனம் மற்றும் உடல் ரீதியாக பின்னடைவு.. உடல் எடையை குறைத்து இப்படிதான் – கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்!
நடிகை பூஜா ஹெக்டேவின் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை பூஜா ஹெக்டே, தொடர்ந்து புது படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழில் ஜன நாயகன் படத்தை அடுத்தாக, ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் காஞ்சனா 4 படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தாளுக்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் புது புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறாராம். அந்த விதத்தில் ஜன நாயகன் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, மேலும் தமிழில் இவருக்கு புது படங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.